பாலிவுட் ஆக்ஷன் திரைப்படத்திற்கு இணையாக, சென்னை உதவி ஆய்வாளர் இரண்டு மொபைல் திருடர்களை துரத்திச் சென்று மடக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனியில் வசித்து வரும் ரவி, மாதவரம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.
அப்பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அண்டிலின் ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று திருடர்களை சாதூர்யமாக மடக்கிப் பிடித்தார். இதன்மூலம், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
It’s not a scene from any movie. But the real life hero SI Antiln Ramesh single handed chasing and catching a mobile snatcher riding a stolen bike. Follow up led to arrest of three more accused and recovery of 11 snatched/stolen mobiles. pic.twitter.com/FJYdoma7I4
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) November 27, 2020
இந்த சிசிடிவி காட்சியினை ட்விட்டரில் பதிவு செய்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ரமேஷின் துரித நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக, தனது அலுவலத்தில் தேநீர் விருந்து அளித்ததாக தெரிவித்தார்.
நெட்டிசன்களின் ரியாக்சன்கள்:
It’s not a scene from any movie. But the real life hero SI Antiln Ramesh single handed chasing and catching a mobile snatcher riding a stolen bike. Follow up led to arrest of three more accused and recovery of 11 snatched/stolen mobiles. pic.twitter.com/FJYdoma7I4
— Mahesh Aggarwal, IPS (@copmahesh1994) November 27, 2020
Royal Salute to Our brave Tamil nadu police
— Rahumathlla (@rahumathlla) November 28, 2020
Yaa... Actually am waiting for this news... Coz am the one saw this lively... Really goosebumps... The way SI chased them was purely action block... HATS OFF to him...
— Dhara'N (@spotoutdharan05) November 28, 2020
ஒரு திருடன் தப்பிவிட்டாலும், மற்றொரு திருடனை, மிகவும் தைரியத்துடன், விடா முயற்சியோடு துரத்தி பிடித்த சம்பவம் வரவேற்கத்தக்கது என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.