Advertisment

'பசிச்சா ஒரு டீ வாங்கி குடி, பன்னு வாங்கித் திண்ணு; அதுக்காக இப்படியா!' ஆக்டோபஸிடம் சிக்கிய இளம்பெண் (வீடியோ)

seaside girl Little Seven என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுபவர் எமிட்லா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
latest viral video

latest viral video

கடல்வாழ் உயிரினமான ஆக்டோபஸை உயிருடன் உண்ணும் முயற்சியில், அதனுடன் பெண் ஒருவர் சண்டையிட்டு தப்பித்த வீடியோ, நெட்டிசன்களால் வைரலாகி வருகிறது.

Advertisment

சீனாவின் முன்னணி வலைப்பதிவு எழுத்தாளரும், seaside girl Little Seven என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுபவருமான எமிட்லா, உயிருடன் ஆக்டோபஸை சாப்பிட உள்ளதாக அறிவித்தார். அதன்படி, அவருக்கு உயிருள்ள ஆக்டோபஸ் வழங்கப்பட்டது.

அதை உண்ண முயன்ற எமிட்லாவின் முகத்தில் ஆக்டோபஸ் ஒட்டிக்கொண்டது. அதனுடைய முட்தோலிகள் போன்றதொரு அமைப்பு, எமிட்லாவின் முகத்தில் நன்றாக பதிந்துவிட்டது.

இதனால், நிலைகுலைந்த எமிட்லா, அதனிடமிருந்து விடுபட கடும் பிரயத்தனம் மேற்கொண்டார். இறுதியில், முகத்தில் சிறுகாயங்களுடன் ஒட்டியிருந்த ஆக்டோபஸிலிருந்து விடுபட்டார்.

இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் நெட்டிசன்களால் வைரலாகி பரப்பப்பட்டு வருகிறது.

-குமரன் பாபு

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment