Advertisment

சுவையான, ஆரோக்கியமான?! சிள்வண்டுக் கறி... வைரலாகும் “சூப்பர் ரெசிபிகள்”...

அமெரிக்கர்களின் கைவண்ணத்தில் உருவான சில வண்டு ரெசிபிகள் உங்களுக்காக... ஒரு வேளை உங்கள் ஏரியாவிற்கு இந்த வண்டுகள் படையெடுத்தால் நிச்சயமாக இது உங்களுக்கு உதவலாம்.

author-image
WebDesk
New Update
cicadas recipes insect delicacies

cicadas recipes insect delicacies : தங்களின் வாழ்நாள் முழுவதும் நிலத்திற்கு அடியே வாழ்ந்து மறையும் சிவப்பு நிற கண்கள் கொண்ட சிகாடஸ் வண்டுகள் 17 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மக்களின் பார்வைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் இந்த கோடை காலத்தில் பறந்து திரிந்த வண்டுகளை எல்லாம் அடித்து நொறுக்கி சமையலறைக்குள் கொண்டு வந்து சேர்த்து வைத்துள்ளனர் அமெரிக்கர்கள்.

Advertisment

குறைவான கொழுப்பும், அதிக புரதமும் நிறைந்திருக்கும் இந்த சிகாடஸ் வண்டுகளை பல்வேறு விதங்களில் சமைத்து உண்பதோடு அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர். வறுவல், பொறியல், வறுத்து பொடியாக்கி, உரைய வைத்து சாக்லெட் டிப் கொண்டு உண்டும் வருகின்றனர்.

மேலும் படிக்க : நாய்களை காக்க கரடியிடம் போராடிய 17 வயது இளம் பெண்

வண்டு சமையல் நிபுணரான டேவிட் ஜார்ஜ் கார்டன் “வண்டுகள் மீது இருக்கும் வெறுப்பை நாம் கைவிட வேண்டும். ஏன் என்றால் நம் அனைவரின் உணவு கலாச்சாரத்திலும் ஏதோ ஒரு இடத்தில் வண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்” என்று கூறுகின்றார்.

அமெரிக்கர்களின் கைவண்ணத்தில் உருவான சில வண்டு ரெசிபிகள் உங்களுக்காக... ஒரு வேளை உங்கள் ஏரியாவிற்கு இந்த வண்டுகள் படையெடுத்தால் நிச்சயமாக இது உங்களுக்கு உதவலாம். ஆனாலும் நம்மைப் போன்று பலரும் இதனை அவ்வளவு ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் சமூக வலைதளங்களில் நாம் காணலாம். ஆனால் ஒன்று, அடுத்தவரின் உணவு தேர்வை நாம் கேள்வி கேட்பதோ, சாப்பிடக் கூடாது என்று திணிப்பதோ அநாகரீகம்.

மனிதருக்கு பரவிய H10N3 பறவைக் காய்ச்சல்; ஏற்பட இருக்கும் விளைவுகள் என்ன?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment