Advertisment

அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு புலம் பெயர்ந்த பனிக்கரடிகள்; காலநிலை மாற்றத்தின் கொடூர முகம்

வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பனி மலையில் பனியே இல்லாமல் கூட்டம் கூட்டமாக கரடிகள் நகரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Climate change forces polar bears to migrate to Russia

கூட்டம் கூட்டமாக புலம் பெயரும் பனிக்கரடிகள்

Climate change forces polar bears to migrate to Russia: உலகம் வெப்பமயமாதலால் ஏற்படும் தீங்குகள் குறித்து கடந்த சில பத்தாண்டுகளாகவே ஆராய்ச்சியாளர்கள் நம்மை எச்சரிக்கை செய்து வருகின்றனர். மனிதர்களாகிய நம்முடைய செயல்பாடுகள் பெரிய அளவில் மனிதர்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகளில் வசிக்கும் விலங்குகளின் வாழ்க்கையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை தான். அதற்கு மேலும் ஒரு வலுவான உதாரணத்தை சேர்த்துள்ளது இந்த புகைப்படம்.

Advertisment

முடிந்தால் சிறுத்தையை கண்டுபிடியுங்கள்! வைரல் புகைப்படம்

2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை சுமார் 40% அலாஸ்கா பனிக்கரடிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை குறைவுக்கு காரணமாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட காரணம் பனிக்கரடிகளின் இடப் பெயர்வு. அலாசாஸ்காவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெப்பநிலை உயர்வால் போலார் கரடிகள் அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு இடம் பெயர்ந்துள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்காவில் சராசரி வெப்பநிலை 4.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதனால் பனிப்பாறைகள் மற்றும் பனி மலைகள் உருகும் சூழலும், பனிக்கடல்கள் உருகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. தங்களின் வாழ்விடங்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த பனிக்கரடிகள் தற்போது ரஷ்யாவை நோக்கி நகர துவங்கியுள்ளன. இந்த புலம் பெயர்தல் காரணமாக ரஷ்யாவின் வ்ராங்கெல் தீவில் (Wrangel Island) பனிக்கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தாய் அன்புக்கு நிகரேது… குஞ்சுகளுக்கு தண்ணீரில் ஒளியக் கற்றுக் கொடுக்கும் தாய் வாத்து: வீடியோ

டெலிகிராஃப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பனிக்கரடிகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பனி மலையில் பனியே இல்லாமல் கூட்டம் கூட்டமாக கரடிகள் நகரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு ட்வீட்டை இதுவரை 5 ஆயிரம் நபர்கள் ரிட்வீட் செய்து தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment