Advertisment

"டே பொடியா ஹெல்மெட் போடு"… சிக்னலில் குறும்புத்தனமாக பேசும் கோவை டிராஃபிக் போலீஸ் - வீடியோ

கோவை: சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு தனது குறும்புத்தனமான பேச்சின் மூலமாக விழிப்புணர்வு அளிக்கும் போக்குவரத்து காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore: funny comment of traffic police at signal, video goes viral Tamil News

Coimbatore traffic police makes funny comment on helmet wearing at signal, video goes viral Tamil News

Coimbatore News in Tamil: நல்லா சிரிக்கிற ராஜா.டேய் தம்பி ஹெல்மெட் போட்டு போடா என சாலை விதிகளை தன்னுடைய குறும்புத்தனமான பேச்சின் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Advertisment

கோவை லக்ஷ்மி மில் சிக்னலில் பணியை பார்த்துக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனத்தில் இருக்கும் ஒருவரை நல்லா சிரிக்கிற ராஜா என்றும் மற்றொரு சிக்னல் திறந்து விடபட்டதும் இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் மூன்று பேர் பயணித்ததை கண்ட காவலர் டே பொடியா ஹெல்மெட் போட்டுவிட்டு வாகனத்தை ஓட்டிச் செல்லடா என்றும் கூறுகிறார். மேலும், மூன்று பேரை வைத்து வண்டில போற, அப்பா அம்மாக்கு தெரியாம வண்டிய தூக்கிட்டு வந்துடுறீங்க என்றும் சொல்கிறார்.

இத்தகைய செயல்பாடுகளை வாகனத்தில் பயணிக்கும் போது செய்ய வேண்டாம் என்று நக்கலான பேச்சுகள் வாகன ஓட்டிகளை திரும்பி பார்க்க வைக்கிறது. அந்த போக்குவரத்து காவலரின் குறும்புத்தனமான விழிப்புணர்வு அறிவுரைகள் தற்போது கோவை வாகன ஓட்டிகளின் மத்தியில் வைரலா வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Viral Social Media Viral Coimbatore Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment