Advertisment

கொரோனாவுக்கு இடையே ஜேஇஇ தேர்வு - மாணவர்களின் மனதைரியத்தை பாராட்டும் நெட்டிசன்கள்

JEE Main 2020 : கொரோனா தொற்று போன்ற இக்கட்டான நிலையில், இந்தாண்டில் நடைபெறும் தேசிய அளவிலான முதல் நுழைவுத்தேர்வு ஜேஇஇ தேர்வு ஆகும்.

author-image
WebDesk
New Update
coronavirus, lockdown, jee mains, jee mains exams, jee aspirants taking exams, JEE Main 2020, joint entrance exams, trending, indian express, indian express news

2020ம் ஆண்டு மாணவர்களுக்கு ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வதுபோன்று உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள அவர்கள், ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் போன்றவைகளால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், பி.ஆர்க் படிப்பில் சேர்வதற்கான ஜேஇஇ (முதன்மை) தேர்வு இன்று ( செப்டம்பர் 1) நாடுமுழுவதும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு விரைந்த நிகழ்வு, சமூகவலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisment

கொரோனா தொற்று போன்ற இக்கட்டான நிலையில், இந்தாண்டில் நடைபெறும் தேசிய அளவிலான முதல் நுழைவுத்தேர்வு ஜேஇஇ தேர்வு ஆகும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிநபர் இடைவெளி கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. இன்று ( செப்டம்பர் 1) முதல் அடுத்த 6 நாட்களுக்கு 12 ஷிப்டுகளாக நாடெங்குமிலும் உள்ள 660 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வில் 8.58 லட்சம் தேர்வர்கள் பங்கேற்கின்றனர்.

ஜேஇஇ முதன்மை தேர்வு, மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி, எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்வு மையங்களின் முன்பகுதியில் முகக்கவசம் அணிந்த தேர்வர்கள், அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிகழ்வு போன்றவைகளின் போட்டோக்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோக்கள், வீடியோக்களுக்கு, நமது நெட்டிசன்கள் பல்வேறுவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்

அவர்களின் சிலரின் கருத்துகளை இங்கு காண்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - As JEE-Main exams begin amid Covid-19, netizens take to Twitter to boost morale of aspirants

Social Media Viral Trending Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment