காதலனுடன் கைக்கோர்த்து சென்ற பிரபல நடிகை...வீடியோ எடுத்த ரசிகைக்கு அடி!

தீபிகா என் அருகில் வந்து என்னை தாக்கினார்

ரன்வீர் சிங்குடன் கைக்கோர்த்து சென்ற காட்சியை வீடியோ எடுத்த ரசிகையை கடுமையாக தாக்கியுள்ளார் நடிகை தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே :

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாகவும் நவம்பர் 19–ந்தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்று பல தகவலகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தான் சென்ற வாரம் திபீகாவும்- ரன்வீரும் அமெரிக்காவிற்கு சென்றனர். அதன் பின்பு புளோரிடாவில் உள்ள டிஸ்னிலெண்டுக்கு விடுமுறையை கழித்தனர். எந்தவித மேக்கப் இல்லாமல் இருவரும் ஜாலியாக வலம் வந்தனர். அங்கிருந்த யாருமே இருவரையும் அடையாளம் கண்டுக் கொள்ளலாம் இருந்துள்ளனர்.

ஆனால் சமூகவலைத்தளங்களில் இருவரும் ஒன்றாக கைக்கோர்த்தும் செல்லும் காட்சிகள் வீடியோவாக வெளியாகின. இந்த வீடியோவின் கீழ் பெண் ஒருவர் செய்த கமெண்ட் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த பெண் கூறியதாவது, “ ரன்வீரும் தீபிகாவும் ஒன்றாக சென்ற காட்சியை நான் வீடியோ எடுத்தேன். அப்போது தீபிகா என் அருகில் வந்து என்னை தாக்கினார், பின்பு நான் எடுத்த வீடியோவை டெலிட் செய்து விட்டு என்னை தீட்டினார்” என்று கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் பகிர்வு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த பெண் தனது இன்ஸ்டாகிராமத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தீபிகா சிரித்துக்கொண்டே கேமராவை நோக்கி வருகின்றார். அதோடு கேமிரா அணைக்கப்படுகிறது.அதன் பின்பு தான் தீபிகா அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகையை தீபிகா தாக்கியதற்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close