Advertisment

சத்தியமா நம்புங்க பாஸ்.. அது நம்ம தோனி தான்! வைரலாகும் வீடியோ

இருப்பினும் தோனி எதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார் என்ற தகவல் உறுதியாக தெரியவரவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
dhoni viral video

dhoni viral video

dhoni viral video : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி ராணுவ பயிற்சியினை விக்டர் படையுடன் சேர்ந்து மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திர தினத்தை  ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.அந்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியது.

Advertisment

அதனை முடித்து அவர் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ பயிற்சி பள்ளி என அனைத்து இடங்களுக்கும் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் தற்போது தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தோனி தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பினார். இந்நிலையில் தோனி தற்போது ஜெய்ப்பூர் ஏர்போர்ட்டில் இருந்து வெளிவரும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் தோனி ஒரு புது லுக்கில் தலையில் டர்பன் கட்டிக்கொண்டு உள்ளார். அவர் நடந்து வரும் அந்த வீடியோவை பதிவிட்ட தோனி ரசிகர்கள் அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். இருப்பினும் தோனி எதற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார் என்ற தகவல் உறுதியாக தெரியவரவில்லை .

சிலர், அது தோனி இல்லை என்று புதுவித வதந்தியை பரப்பி வருகின்றனர். தோனியின் இந்த புது லுக்குக்கு என்ன காரணம் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும்  உண்மையாகவே தோனி பார்ப்பதற்கு சற்று வித்யாசமாக காட்சியளிக்கிறார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment