வைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருப்பதை அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் காலில் டாலட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் ட்ரம்பை கலாய்த்து தள்ளி வருகின்றன.

ட்ரம்பின் காலில் டாய்லர் பேப்பர்:

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சர்சைகளை மாட்டிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவரின் பேச்சுகள், அவர் நடந்துக் கொள்ளும் விதம், அவரின் குடும்பத்தார் என ட்ரம்பை சுற்றிலும் சர்ச்சைகள் அடிக்கடி வந்து போகும்.

அந்த வகையில் ட்ரம்ப் தற்போது மீண்டும் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். இவர் அணிந்திருந்த கால் ஷூவில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருந்தது தான் இத்தனை சிரிப்புகளுக்கும் காரணம். இதுக்குறித்து வெளியான வீடியோவில் டொலால்ட் ட்ரம்ப் விமான படிக்கட்டியில் ஏறி செல்கிறார்.

அப்போது அவரின் கால்களுக்கு ஜூம் வைக்கப்படுகிறது. அப்போது அவர் அணிந்திருந்த ஷூவில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதை சற்றும் கவனிக்காத அவர், சாவகாசமாக விமானத்தில் ஏறி பாய் சொல்கிறார். இதில் மற்றொரு கவனிக்கதக்க வேண்டிய செயல் என்னவென்றால், ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர் ஒட்டிக் கொண்டிருப்பதை அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஏராளமானோர் சுற்றிலும் இருந்தும் அதைக் கவனிக்கவில்லை.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close