வைரல் புகைப்படம்: எம்.ஜி ஆர் உடன் இருப்பது தமிழிசையா? நெட்டிசன்கள் வெளியிட்ட ஃபோட்டோ!

இவர் பேச்சையும், அணியும் உடையும் நெட்டிசன்கள் அடிக்கடி கலாய்த்து வருவது வழக்கம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன்,   தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்  சிறு வயதில் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு ஃபோட்டோ தீயாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில்  மிகவும்  பேசப்படும் அரசியல் தலைவர் தான் தமிழிசை சவுந்தரராஜன். தமிழக பாஜக தலைவரான இவருக்கு   ஏகப்பட்ட் ஃபேன்ஸ். இவர் பேச்சையும்,   அணியும் உடையும்  நெட்டிசன்கள் அடிக்கடி கலாய்த்து வருவது வழக்கம்.

ஆனால், இதை மிகவும் ஸ்போடிவ்வாக எடுத்துக் கொள்ளும் அரசியல் தலைவரும் தமிழிசை தான்.  சமீபத்தில் இவரிடம், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழிசை அளித்த பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.  அவர் கேட்ட கேள்வி,

“சமூகவலைத்தளங்களில் உங்களை குறித்த மீம்ஸ்கள் ஏராளமாக வருகிறதே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “ அதற்கு சிரித்துக் கொண்டே தமிழிசை, “நன்றாக தான் இருக்கிறது., மீம்ஸ் போடும் அளவிற்கு நான் பெரிய ஆளாக மாறிவிட்டேன்.  என்னுடைய தலைமுடியைப் பற்றி அடிக்கடி கலாய்த்து பார்த்து இருக்கிறேன்.  இப்போதெல்லாம் அதற்காகவே என் தலைமுடியை  ஒழுங்காக வைத்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த பதில், மீம்ஸ் மன்னர்களை நெகிழ வைத்திருந்தது. அதற்கும் அவர்கள் மீம்ஸ்களாலே பதில் சொல்லி இருந்தனர். இந்நிலையில், தற்போது தமிழிசை தனது சிறு வயதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று  வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.  இதில், தமிழிசையை பார்த்து எம்.,ஜி.ஆர் அவர்கள் பலமாக சிரிக்கிறார்.  இந்த புகைப்படத்தில் இருப்பது உண்மையாகவே தமிழிசை தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  இதன் உண்மை தன்மை பற்றி இதுவரை  எந்தவித தகவலும் வெளிவரவில்லை.

 

×Close
×Close