திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் ஜி தனது குழந்தையிடம் நடிகர் அஜித் யார் என்று கேட்க அதற்கு குழந்தை அஜித்தை அடையாளம் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
நடிகர் பிரஜின் நடிப்பில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி அடுத்து இயக்கியுள்ள திரௌபதி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏற்படுத்தியது.
திரௌபதி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானதாகவும் மற்றொரு பிரிவினரை திரைப்படத்தை ஆதரிப்பதாகவும் கூறி சமூக ஊடகங்களில் இரு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில், அண்மையில், ஒரு தமிழ் பத்திரிகை திரௌபதி திரைப்படம் மற்றும் இயக்குனர் மோகனுடன் அஜித்துக்கு உள்ள தொடர்பு பற்றிய ஒரு கட்டுரையில் அஜித் சாதி திரைப்படங்களை ஆதரிக்கிறாரா என்று கேள்வி எழுப்பியது.
இந்த வார குமுதத்தில் #திரெளபதி பற்றி கட்டுரை எழுதி சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் #தல என் மரியாதைக்குரியவர்.. pic.twitter.com/cy1CHxZXk5
— Mohan G ???? (@mohandreamer) January 24, 2020
இந்த நிலையில், இயக்குனர் மோகன், தனது குழந்தையிடம் தல அஜித் யார் என்று கேட்க அதற்கு குழந்தை அஜித்தை அடையாளம் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
மேலும், இயக்குனர் மோகன், இந்த வீடியோவைப் பற்றிய குறிப்பில், “இந்த வார குமுதத்தில் #திரெளபதி பற்றி கட்டுரை எழுதி சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் #தல என் மரியாதைக்குரியவர்..” என்று குறிப்பிட்டுள்ளார்.