Driverless Fiat Viral Video Tamil News: ‘செல்ஃப்-டிரைவிங்’ கார்களை சோதனை செய்யும் நிறுவனங்களின் பெருக்கம் அதிகமாக ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஓட்டுநர் இல்லாமல் ஃபியட் கார் சாலையில் செல்வதுபோல் படமாக்கப்பட்ட காணொளி நெட்டிசன்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது பல சமூக ஊடக தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கும் இந்த வீடியோவில், ஓட்டுநர் இல்லாமல் ஓர் வயதானவர் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருப்பதைப்போல் இருக்கிறது. “ஓர் முதியவர் தன்னுடைய பத்மினி காரை பயணிகள் இருக்கையில் அமர்ந்தபடி ஓட்டிக்கொண்டிருந்தார். இது எப்படி சாத்தியம்?” என்ற கேள்வியோடு ஃபேஸ்புக் பயனரான தாகூர் செர்ரி இந்த காணொளியைப் பகிர்ந்திருந்தார்.
ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ நெட்டிசன்களிடையே பல எதிர்வினைகளைக் கிளப்பியிருக்கிறது. பலர் தங்களின் சொந்த கோட்பாடுகளைப் பகிர்ந்துவருகின்றனர். டிரைவிங் பள்ளிகளில் கற்பிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களில் உள்ளதைப் போலவே அங்குப் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்டீயரிங் போலி என்று சிலர் பகிர்ந்துள்ளனர்.

“இந்த வண்டியின் முன் பக்கம் முழு இருக்கை என்பதுதான் இதன் தந்திரம். மேலும், இதன் கியர் ஸ்டீயரிங் கீழே உள்ளது. டாப் கியரில் நெடுஞ்சாலையை அடைந்ததும், அவர் டிரைவர் இருக்கையிலிருந்து அடுத்த இருக்கைக்கு நகர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் acceleration பெடலைப் பயன்படுத்தியுள்ளார். பள்ளி வாகனம் ஓட்டுவதைப் போலவே, தேவைப்படும்போது மறுபக்கத்திற்குச் செல்லலாம்” என்று ஓர் ஃபேஸ்புக் பயனர் இந்த காணொளியின் சர்ச்சைக்கு விளக்கமளித்தார். இவரும் அந்தக் குறிப்பிட்ட நபரைச் சாலையில் பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”