Advertisment

”யாருய்யா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு” முருகானந்தனை தேடி கோவை வந்த பிராவோ!

பிரச்னைக்குத் தீர்வு காண பிராவோ நீண்ட நாள்களாகவே முயற்சி செய்து வருகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Dwayne Bravo meets muruganandam

Dwayne Bravo meets muruganandam

Dwayne Bravo meets muruganandam : கோவையில், மலிவு விலை நாப்கின் இயந்திரத்தைத் தயாரித்த முருகானந்தத்தை நேரில் சந்திக்க கிரிக்கெட் வீரர் பிராவோ கோவை சென்றார்.

Advertisment

விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவை தமிழர் தான் அருணாச்சலம் முருகானந்தம். இவரின் பெருமை ஆஸ்கார் வரையிலும் கொடிக்கட்டி பறந்தது. இவரது  கண்டுப்பிடிப்பை உலகம் அறிய செய்ய பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமர ‘பேட் மேன்’ என்கிற படத்தில் அருணாச்சலம் முருகானந்தம் கேரக்டரில் நடித்துள்ளார்.

விலை உயர்வான பேட் விற்பதன் காரணத்தினாலேயே பல பெண்கள் இன்னும் நாப்கின்கள் உபயோகிக்காமல் இருப்பதாகவும், அவர்களின் இந்த துயரத்தை நீக்குவதற்காகவே விலை குறைவான ஆரோக்கியமாக நாப்கின்களை உருவாக்கத் தொடங்கியவர் அருணாச்சலம் முருகானந்தம்.

சரி இவரை ஏன் பிராவோ கோவை சென்று நேரில் சந்தித்தார் என்ற கேள்வி தான் உங்களுக்கு? வெயிட் அதற்கும் காரணம் இருக்கிறது. மேற்கு இந்தியா கிரிக்கெட் வீரரான டுவைன் பிராவோ தனது சொந்த ஊரான டிரினிடாட் டொபாகோவில், பள்ளிக் குழந்தைகள் பலரும் மாதவிடாய்ப் பிரச்னையால், பாதியிலேயே நின்றுவிடுகின்றனராம். கிராமப்புற பெண்களுக்கு இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பிராவோ நீண்ட நாள்களாகவே முயற்சி செய்து வருகிறார். இதன் முதல்படியாக கோவை சென்று முருகானந்ததை சந்தித்துள்ளார் பிராவோ.

அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளின் போது முருகானந்தத்தின் பணிகள் பற்றி அறிந்து கொண்ட அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். கோவையில் 'பேட்மேன்' முருகானந்தத்தின் முகவரியை பிராவோவின் மேலாளர்கள் உறுதிப்படுத்திய பின்னர், நேற்றைய தினம் பிராவோ கோவை விரைந்து அவரை சந்தித்து பேசியுள்ளார்.

publive-image

இந்த சந்திப்பின் போது பிராவோ தனது ஊருக்கும் இதே போல் மலிவு விலையில் நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரம் வேண்டும் என்று பிராவோ கேட்டுள்ளார். முருகானந்தமும் நாப்கின்கள் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை டிரினிடாடிற்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார். கோவையில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதி செலவை பிராவோ ஏற்று கொள்வதாக பிராவோ தெரிவித்துள்ளார்.

விரைவில், முருகானந்தம் தயாரித்த இயந்திரங்கள், பிராவோ மூலம் டிரினிடாட் டொபாகோ செல்ல உள்ளன. இந்தியாவைப் போலவே, அங்கும் கிராமப்புறப் பெண்களை வைத்தே நாப்கின்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பிராவோ உடனான சந்திப்பு ஆச்சரியமாக இருந்ததாகவும் முருகானந்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு இதுவரை தெரிந்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் மட்டுமே என்பதையும் அவர் பிராவோவிடம் தெரிவித்திருக்கிறார்.

Dwayne Bravo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment