பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகை ஷேனாஸ் கில் ஆகியோர் இணைந்து சமீபத்தில் மிகவும் பிரபலமான நகைச்சுவை இசை வீடியோவான போரிங் டேவில் இணைந்து நடனமாடினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை யஷ்ராஜ் முகதேவும், ஷெனாஸ் கில்லும் இணைந்து உருவாக்கி கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டனர்.
இந்த வீடியோவில் ஷெனாஸ் உடன் இணைந்து ஷில்பா ஷெட்டி நடனம் ஆடியிருக்கிறார்.

ஆரஞ்சு நிற உடை அணிந்து ஷில்பா ஆடிய நடனத்தை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஷில்பா ஷெட்டி.
அந்தப் பதிவில் இரண்டு போரான நபர்கள் இணைந்து உங்கள் போரிங்டேவை சிறப்பானதாக்க முயற்சி செய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
ஷெனாஸ் கில் பிக்பாஸ் சீசனில் பங்கேற்றவர். பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சித்தார்த் சுக்லா கடந்த ஆண்டு காலமானார். அவரது மறைவுக்கு சீசன் 15இல் அஞ்சலி செலுத்தினார் ஷெனாஸ் கில்.
அதைத்த தொடர்ந்து சில நாட்கள் கழித்து போரிங் டே என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஷெனாஸ்.
பிக் பாஸில் பங்குபெற்றபோது போரிங் டே என்று ஷெனாஸ் கூறியதை வைத்து இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது.
இந்தப் பாடல் வீடியோவில்தான் ஷில்பா ஷெட்டி தற்போது நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “