ஆங்கிலேய ஆட்சியிலிருந்த 5 விநோத சட்டங்கள்

ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகளாகியும், அப்போது பின்பற்ற பல விநோத சட்டங்கள் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகளாகியும், காலணி ஆதிக்கத்தின்போது பின்பற்ற பல விநோத சட்டங்கள் இன்னும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இன்று வரை நாம் கடைபிடித்து வரும், மற்றும் நீக்கப்பட்ட 5 விநோத சட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

1. மோட்டார் வாகனச் சட்டம், 1914:

ஆங்கிலேய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த சட்டத்தின்படி, ஆந்திர பிரதேசத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தினமும் காலையில் புத்துணர்ச்சியுடன், குறிப்பாக பல் துலக்கப்பட்டு அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும். தட்டையான பாதம், குறுகலான மார்பு, சுத்தியான கால் விரல் உள்ளிட்ட பல அபத்தமான காரணங்களுக்காக, இந்த சட்டத்தின்படி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போதைய நிலைமை: இச்சட்டம் நீக்கப்பட்டுவிட்டது

2. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 497, 1860:

இந்த சட்டப்பிரிவின்படி, ஒரு ஆண், மற்றொருவரின் மனைவியுடன் அவருக்கு தெரியாமல் பாலியல் தொடர்புகொண்டால், அது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படுகிறது. இதன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.

தற்போதைய நிலைமை: இச்சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

3. இந்திய விமான சட்டம், 1934:

இந்த சட்டமானது விமான வடிவமைப்பு, பயன்பாடு, இயக்கம், விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்க உருவாக்கப்பட்டது. ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும்போது செலுத்தும்போது, அந்த நேரத்தில் காற்றழுத்த மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தியதாக கருதப்படும் பலூன்கள் மற்றும் பட்டங்கள் ஆகியவையும் உள்ளடக்கியது என கூறுகிறது. ஆக, விமானம் விபத்துக்குள்ளானால் அதற்கான இழப்பீட்டை கோரும்போது பலூன்கள், பட்டங்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலைமை: நீக்கப்பட்டுவிட்டது.

4. இந்திய புதைபொருள் சட்டம், 1878:

இந்த சட்டத்தின்படி, பூமிக்கடியில் ஒருவர் கண்டுபிடிக்கும் ரூ.10 அல்லது அதற்கு மேற்பட்ட பணம் அல்லது பொருட்கள் எதுவாக இருந்தாலும், அதனை உள்ளூரில் உள்ள உயரதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த சட்டமானது, வரலாறு மற்றும் தொல்லியல் ரீதியான புதைபொருட்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்பு, 1886-ஆம் ஆண்டு அப்போதைய பொது இயக்குநர் ஜேம்ஸ் பர்கஸ், பூமிக்கடியில் கிடைக்கும் புதைபொருட்களை அரசாங்க அனுமதியின்றி அதிகாரிகள் அப்புறப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டார்.

தற்போதைய நிலைமை: நீக்கப்பட்டுவிட்டது.

5. சராய் சட்டம், 1867:

இச்சட்டத்தின் படி உணவக உரிமையாளர்கள் வழிப்போக்கர்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்க வேண்டும். உணவகங்கள் முறையாக இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்க இச்சட்டம் உருவாக்கப்பட்டது. எல்லா உணவகங்களும் மாநில அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு தற்போது உட்பட்டிருந்தாலும், இச்சட்டத்தை பல சமயங்களில் உணவக உரிமையாளர்களிடம் அத்துமீற காவல் துறையினர் உபயோகித்து வருகின்றனர்.

தற்போதைய நிலைமை: இச்சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close