நடு வானில் பறக்கும் விமானத்தில், விமான பணிப்பெண்ணிற்கு ஆண் நண்பன் லவ் பிரபோஸ் செய்தார். அதன் வைரல் வீடியோ பரவிய பிறகு அவருக்கு அந்த விமான நிறுவனம் அந்த பெண்ணை பணிநீக்கம் செய்தது.
பொதுவாக லவ் பிரபோஸல் என்றாலே ஒவ்வொருவருக்கும் பல கனவுகள் இருக்கும். சிலர் மலை உச்சத்தில் நின்று காதல் கூறுவார்கள், சிலர் கடற்கரையில், மற்றும் சிலர் பூந்தோட்டத்தின் நடுவே நின்று கூட காதலை கூறுவார்கள்.
மேலும் சிலர் வானில் பறக்கும் பேராச்சூட்டில் கூட காதலை கூறுவார்கள். ஆனால் சீனாவில் ஒரு இளைஞர் பறக்கும் விமானத்தில் லவ் பிரபோஸ் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரலானது.
மணமக்களை அதிர வைத்த கல்யாண பரிசு..! ஊர் முழுக்க இதே பேச்சு குறித்த செய்திக்கு:
சீனாவில் உள்ள சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நடு வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமான பணிப் பெண்ணை ஒரு இளைஞர் வெகு நாட்களாக காதலித்து வந்தார். தனது காதலை சொல்ல முடிவெடுத்த அவர், விநோத முடிவை எடுத்தார்.
சீனா நிறுவனத்தின் விமானம் நடு வானில் பறக்கும்போது தனது காதலியிடம் லவ் பிரபோஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, காதலி பயணித்த விமானத்தில் இவரும் பயணித்து, மண்டியிட்டு மோதிரம் நீட்டி “நான் உன்னை காதலிக்கிறேன், என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?” என்று கேட்டுள்ளார்.
இந்த லவ் பிரபோஸல் சுமார் 30 நிமிடம் வரை நீடித்துள்ளது. சக பயணிகள் இதனை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பகிர்ந்தனர். இந்த வீடியோவை பார்த்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், அந்த பணிப்பெண்ணை வேலையை விட்டு நீக்கியது.
பணியில் இருக்கும் நேரத்தில் பயணிகளை கவனிக்காமல் சொந்த வாழ்க்கையை கவனித்ததால் பணிநீக்கம் செய்யப்படுவதாக காரணம் கூறியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க:
இந்த காரணத்திற்கு பலரும் எதிர்ப்பும் சிலர் ஆதரவும் அளித்து வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Flight attendant loses job
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை