Advertisment

தாய்மை, கருணை நரிக்கும் உண்டு; தாயை இழந்த கோலா கரடிகளுக்கு பாலூட்டிய நரி - வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் வைரலாகி பரவி வருகிறது. காட்டு தீயில் தனது தாயை இழந்த குட்டிகளுக்கு வேற்றுமை பாராமல் பாலூட்டிய நரியின் செயலை டுவிட்டர் பயனாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fox feeds to Koala bears, Fox allows feeds to Koala bears kids, கோல கரடி குட்டிகளுக்கு பாலூட்டிய நரி, பாலூட்டிய நரி, ஆஸ்திரேலியா, fox feeds to kola bears in Australia, fox feeds to kolas viral video, viral video

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது.

Advertisment

மனிதர்கள் மனிதத் தன்மையை மறந்து, பலரும் சாதி, மதம், வெறுப்பு, வன்முறை என்று மோசமான போக்கில் போய்கொண்டிருக்கும் நிலையில் விலங்குகள் கருணையைப் பற்றி மனித இனத்துக்கு பாடம் புகட்டும் வகையில் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்ட காட்டுத் தீயில், 50 மில்லியன் விலங்குகள் இறந்தன. கொடூரமான தீயில் காட்டில் இருந்த செடிகொடிகள், மரங்கள், என அனைத்து கருகி சாம்பாலானது. இந்த காட்டுத் தீயில் பல பெரிய விலங்குகள் உயிரிழந்ததால் அதன் குட்டிகள் ஆதரவற்று தவித்து வருகின்றன.

பொதுவாக நரிகளைப் பற்றி பலரும் சிறு வயதில் கதைகள் கேட்டிருப்போம். நரிகள் தந்திரமானவைகள். வஞ்சகம் நிறைந்தவைகள் என்று கதைகள் கேட்டிருப்போம். சிறு வயதில் கேட்கிற எதுவொன்றையும் அப்படியே நம்பிவிடுவோம். நரிகளைப் பற்றிய அந்த எண்ணம் மிகவும் தவறானவை என்று கூறும்படி ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் தாயை இழந்து தவித்துவரும் கோலா கரடி குட்டிகளுக்கு நரி ஒன்று பாலூட்டும் வீடியோ இணையத்தில் காட்டு தீ போல் வைரலாகி பரவி வருகிறது. காட்டு தீயில் தனது தாயை இழந்த குட்டிகளுக்கு வேற்றுமை பாராமல் பாலூட்டிய நரியின் செயலை டுவிட்டர் பயனாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Viral Social Media Viral Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment