Advertisment

150 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கல்லறை நடுக்கல்; ஸ்வீட் செய்ய பயன்படுத்திய அதிர்ச்சி சம்பவம்

, ஒரு சிறப்பு நினைவஞ்சலி ஏற்பாடு நடத்திய பிறகு 172 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த வால்லெரின் இரண்டு மகள்களின் கல்லறைகளுக்கு பக்கத்தில் அவரின் நடுக்கல் வைக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
tombstone, headstone, viral news

Gravestone of US man missing for almost 150 years : அமெரிக்காவில் 1849ம் ஆண்டு உயிரிழந்தவர், தொழிலதிபர் பீட்டர் ஜே. வெல்லர்ஸ். அவருடைய கல்லறையை மௌண்ட் ஹோப்பிற்கு 1875ம் ஆண்டு மாற்றிக் கொண்டு வரப்பட்ட போது அவருடைய கல்லறையின் மேல் வைக்கப்பட்ட நடுக்கல் மட்டும் காணாமல் போனது.

Advertisment

இது தொடர்பாக லான்சிங்ஸ் பகுதியின் ஹிஸ்டோரிக் செமரிட்ரீஸ் குழு ஒன்று இந்த நடுக்கல்லை தேடி வருவதாகும், இது சுமார் 146 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து விட்டதாகவும் கூறி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த அமைப்பின் தலைவர் சொரெட்டா எஸ். ஸ்டான்வே இது தொடர்பாக சி.என்.என். செய்திகளிடம் பேசிய போது, இந்த நடுக்கல்லை பயன்படுத்தி வந்த வயதான மூட்டிக்கு அல்செய்மர் நோய் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல் கிடைத்ததாக கூறினார்.

அந்த வயதான பெண்மணிக்கு சொந்தமான அனைத்து பொருட்களையும் ஏலத்தில் விற்பனை செய்த போது, அவருடைய சமையல் அறையில் இருந்த ஸ்லாப் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதனை திருப்பிப் பார்த்த போது அது ஒரு நபரின் நடுக்கல் என்று கண்டறியப்பட்டது. ஃபட்ஜ் எனப்படும் இனிப்பு பண்டத்தை செய்வதற்கு தேவையான பொருட்களை குளிரூட்ட இது போன்ற பெரிய ஸ்லாப்களை பயனபடுத்துவார்கள். ஆனால் லான்சிங்கில் இருந்து இந்த நடுக்கல் எப்படி ஒகேமோஸில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

அந்த வீட்டில் இருப்பவர்கள் யாருக்கும் இந்த நடுக்கல் எப்படி அவர்களின் வீட்டிற்கு வந்தது என்றும் எப்போது வந்தது என்றும் தெரியவில்லை. ஆனால் வீட்டின் உரிமையாளர்கள், இதன் பின்புறம் ஃபட்ஜ் செய்ய பயன்படுத்தினோம் என்று மட்டும் கூறியுள்ளனர். இது சட்டப்பூர்வமான நினைவுச்சின்னம் என்பது அவர்களுக்கு தெரியுமா அல்லது எங்கிருந்தாவது எடுத்து வந்து பயன்படுத்தினார்களா என்றும் அவர்களுக்கு தெரியவில்லை என்று ஸ்டான்வே கூறினார்.

வால்லெரின் நடுக்கல் கிடைத்துவிட்டது தொடர்பாக அவர்களுடைய உறவினர்களுக்கு தெரிவிக்க முயன்ற போது அவருடைய வம்சாவளியினர் யாரும் இல்லை என்று கண்டறியப்பட்டது. பிறகு அந்த நடுக்கல்லை தாங்களே சுத்தம் செய்து, ஒரு சிறப்பு நினைவஞ்சலி ஏற்பாடு நடத்திய பிறகு 172 ஆண்டுகளுக்கு முன்பே இறந்த வால்லெரின் இரண்டு மகள்களின் கல்லறைகளுக்கு பக்கத்தில் அவரின் நடுக்கல் வைக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment