Advertisment

பெட்ரோல் விக்கிற வெலைக்கி வீட்டுக்கு நாலு வாங்கிப் போடணும்... 40 கி.மீ வரை ஓடும் ஹைப்ரிட் பைக்

இந்நிலையில் குஜராத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் ஓடும் ஹைப்ரிட் மோட்டர்பைக் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Electric bike, petrol running bike, hybrid bikes

motorbike that runs on petrol and electricity : இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோலின் விலை நாம் நினைத்ததைக் காட்டிலும் மிக அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அடிப்படை தேவைகள் மற்றும் உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் குஜராத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் ஓடும் ஹைப்ரிட் மோட்டர்பைக் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

வி.வி.பி. கல்லூரி மாணவர்கள் 40 கி.மீ வரை பேட்டரியில் ஓடும் இந்த மோட்டர் பைக்கை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். பெட்ரோல் விலை உயர்வே இந்த கண்டுபிடிப்பிற்உ காரணம் என்று அந்த கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு டீன் டாக்டர் மணியர் தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பல இ-வாகனங்கள் சார்ஜ் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் பெட்ரோலின் விலையும் உயர்ந்து வருகிற நிலையால் இரண்டிலும் ஓடும் வகையில் இந்த இரு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment