Advertisment

30 -வது வயதில் விராட் கோலி.. இன்னும் எத்தனை சாதனைகளை செய்ய வேண்டும் ரன் மெஷின்?

அடுத்த சச்சின் கோலி என்பது வெறும் வார்த்தை மட்டுமில்லை அவரின் ரசிகர்களுக்கு அது ஒரு எமோஷன்

author-image
sreeja
புதுப்பிக்கப்பட்டது
New Update
விராட் கோலி பிறந்த நாள்

விராட் கோலி பிறந்த நாள்

ரன் மிஷின் வேற யாரு..இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

Advertisment

விராட் கோலி பிறந்த நாள்:

இளம் வயதிலயே பல முன்னனி வீரர்கள் கூட எட்டுவதற்கு அஞ்சிய பல சாதனைகளை,அசால்டாக  செய்து வரும் விராட் கோலிக்கு  திருமணத்திற்கு பிறகும் பெண் ரசிகைகள் ஏராளம். முன் கோப காரர், முரண்டன் என விராட்க்கு எதிராக ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும்,  இந்திய அணியின் ரன் மெஷின் என்ற புகழ் இவை அனைத்தையும் மறைய செய்கிறது.

விராட் கோலி பிறந்த நாள்

கிரிக்கெட் பின்புலமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவே, அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி கண்டிப்பாக விராட்டின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீராம் என்றே சொல்லலாம்.

கோலியின் அசூர ஆட்டத்தை கண்டு வியந்த முதல்  ரசிகர்கள் யார் தெரியுமா? அவரின் பக்கத்து வீட்டு காரர்கள் தான்.  அன்று தனது அதிரடியால் பக்கத்து வீட்டுக்காரர்களின் ஜன்னல்களை மிரட்டிய விராட், இன்று எதிரணியை  பார்வையாலேயே அச்சுறுத்தி வருகிறார்.

விராட் கோலி பிறந்த நாள்

கிரிக்கெட் மீது விராட்  கொண்ட தீரா பசி, பல சாதனைகளுக்கு பின்னரும் இன்றும் தொடங்குகிறது.  19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டி தான் விராட்டின் முதல் பரீட்சை எனலாம். தன்னுடைய அதிரடியையும், அசுர வேகத்தையும் பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் கேப்டன் பொறுப்பிலும் வெளிப்படுத்தி,  உலக கோப்பையையும் தனது பக்கத்தில் வர செய்தார்.

2008 ஆம் ஆண்டு விராட்டின் லக்கி இயர். இலங்கைக்குக்கு எதிரான போட்டியில் சச்சின், சேவாக் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததால் அந்த லக்கி வாய்ப்பு விராட்டுக்கு கிடைத்தது.  முதல் போட்டியில் 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் அந்த தொடரில் 4-வது போட்டியில் தனது முதல் சர்வதேச அரைசதத்தை அடித்தார்.

அன்று தொடங்கிய அவரின் சத வேட்டை  இன்று வரை அப்படியே தொடர்கிறது. இந்தியா அணியில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வரும் விராட் மீது ஏழாத விமர்சனங்களே இல்லை.

ஆங்கிரி பேட் என்ற விமர்சனம் அவரின் மனதை புண்படுத்தியதே தவிர விளையாட்டை ஒரு போதும் பாதித்தது கிடையாது.  2013 ஐசிசி-யின் பேட்ஸ் மேன் தரவரிசையில் கோலி முதலிடமும் பிடித்தார்.ஓய்வே இல்லாமல் இந்திய அணியில் ஆடிவரும் ஒரே வீரர் கோலிதான்.

போதும் போதும்.. என்ற அளவிற்கு ஏகப்பட்ட சாதனைகள்.  விராட் கோலியை கிரிக்கெட் வீரராக ரசித்த பலர் அவரை கேப்டனாக  ஏற்றுக் கொள்ள தயங்கினர்.  ஆனால் தம்மால் முயன்ற அளவிற்கு அந்த பதவிக்கு உரிய மரியாதையை  விராட் சிறப்பாக செய்து வருகிறார் என்பது அவரின் ரசிகர்களின் கருத்து.

விராட் கோலி பிறந்த நாள்

சொந்த வாழ்க்கையிலும் விராட்டிற்கு நினைத்து எல்லாம் கைக்கூடியது. பல்வேறு போராட்டங்கள் விமர்சனங்களுக்கு பிறகு காதல் மனைவி அனுஷ்கா சர்மாவை கரம் பிடித்தார் விராட்.  தனது மனைவி குறித்து என்ன விமர்சனங்கள் வந்தாலும் அதை  உதரி தள்ளி விட்டு அனுஷ்கா தான் எனது கேப்டன் என்று கம்பீரத்துடன் எல்லா பேட்டியிலும் பதிவு செய்தார்.

விராட் கோலி  இதுவரை, ஒருநாள் போட்டியில் 38 சதங்கள், டெஸ்ட் போட்டியில் 24 சதங்கள், அவர் சதம் அடிக்காத ஒரே தொடர் டி-20 தான்.  இந்தியாவின் அடுத்த சச்சின் கோலி என்பது வெறும் வார்த்தை மட்டுமில்லை அவரின் ரசிகர்களுக்கு அது ஒரு எமோஷன்.

விராட் கோலி பிறந்த நாள்

கோலி.. கோலி என அரங்கத்தில் குரல்கள் முழுங்குவதை பார்க்கும் போது  ஆச்சரியமாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று விராட்  நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். விராட்டின் உ ழைப்பிற்காக இந்திய அரசாங்கம் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, ராஜிவ் காந்தி, கேல் ரத்னா, அர்ஜூனா ஆகிய விருதுகளை அளித்து பெருமை படுத்தியது.

விராட் கோலி பிறந்த நாள்

விராட்டின் இந்த சாதனை அப்படியே தொடர வேண்டும் என்பது தான் அவரின் அனைத்து ரசிகர்களின் ஆசை.  தனது 30 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் விராட்டிற்கு சக வீரர்கள்,சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Virat Kohli Anushka Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment