தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா... தமிழில் உருகிய ஹர்பஜன் சிங்!

வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ

தந்தையர் தினத்தன்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மிகவும் உருக்கமாக பதிவிட்டிருக்கும் ட்வீட் ஒன்று ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது.

ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்களுக்கு லைக்ஸ் போடவும், ட்வீட் செய்யவும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு தழிம் மொழி மீது அலாதியான பிரியம். சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தமிழில் புலவர் ரேஞ்சுக்கு பல ட்வீட்களை பதிவு செய்து கலக்கியுள்ளார்.

ஒருமுறை தோனி கூட, ஹர்பஜனை தனியாக அழைத்து, “ எப்படி நீ தமிழில் ட்வீட் போடுகிறாய்? அந்த ரகசியத்தஒ சொல்” என்று கேட்டாராம். அந்த் அளவிற்கு தமிழ் மொழியை ஹர்பஜன் சிங் அதிகம் விரும்பி வருகிறார். குறிப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் 2018 லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து ஹர்பஜனின் தமிழ் ஆர்வம் பெருமளவில் அதிகரித்தது .

சென்னை ரசிகர்களின் கேள்விகளுக்கு அழகிய தமிழில் பதில் அளித்து ட்விட்டர் பக்கத்தையே ஹர்பஜன் சிங் தெறிக்க விட்டார். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் தங்கள் அப்பாக்களின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.அதே போல் ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து தந்தைமார்களுக்கும் உலக தந்தையர் தின வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். ஆனால் எந்த மொழியில் தெரியுமா?

அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் மொழியில் தான். மிகவும் உருக்கமான வரிகளுடன், சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வரிகள், “ தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போகும் அப்பா உன் அன்பிற்கு முன்னே. ஈடு இணை இல்லா அற்புதம் நீ!! வாழ்க்கையின் அர்த்தம் புரியவைத்த தீர்க்கதரிசி நீ!! சுயநலம் என்ற வார்த்தை தெரியாத வள்ளல் நீ!! உலகின் அனைத்து தந்தையர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் நான் உட்பட ”

ஹர்பஜனின் இந்த பதிவை கண்ட் ரசிகர்கள் பலரும், பதிலுக்கு ஹர்பஜனுக்கு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close