Advertisment

சிங்கிளா சிக்கிய சிங்கம்… ரவுண்ட் கட்டிய காட்டு எருமைகள் - வைரல் வீடியோ

சிங்கத்தை காட்டு எருமைகள் ரவுண்ட் கட்டி விரட்டிய சுவாரஸ்யமான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
சிங்கிளா சிக்கிய சிங்கம்… ரவுண்ட் கட்டிய காட்டு எருமைகள் - வைரல் வீடியோ

சமீப காலங்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், சிங்கத்தை காட்டு எருமைகள் ரவுண்ட் கட்டி விரட்டிய சுவாரஸ்யமான வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisment

காட்டு எருமைகள் எப்போது சிங்கத்தின் விருப்பமான உணவாகும். அத்தகைய பெரிய உருவத்தை, சிங்கம் வேட்டையாடி சாப்பிடும். அதிகப்படியான உணவு கிடைப்பதால், 5 நாள்களுக்கு சிங்கம் வேட்டையாட செல்ல வேண்டிய நிலை இருக்காது. அதே சமயம், காட்டு எருமையை வேட்டையாடுவதும் எளிதானது அல்ல. பல வீடியோக்களில் சிங்கத்தை, காட்டு எருமைகள் கொம்பை உபயோகித்து தூக்கு வீசுவதையும் பார்த்திருப்போம்.

அப்படியோரு வீடியோ தான், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிங்கம் சிங்களாக தான் வரும் என்கிற சினிமா வசனத்தை போல், சிங்கிளாக சென்று சிக்கலில் மாட்டிய வீடியோ தான் இது. எருமை கூட்டத்தின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், சிங்கத்தின் வேட்டை தோல்வியில் முடிந்தது.

இறுதியில் தப்பித்தால் போதுமுனு, பூனை போல் அங்கிருந்து பயந்தோடியது. இந்த வீடியோ ‘wildlife_stories என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment