scorecardresearch

ஹிஜாப் அணிந்த மாணவிகள் நடனம் ஆடி ஓணம் கொண்டாட்டம்; வைரல் வீடியோவை லைக் செய்த காங் எம்.பி

கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நடனம் ஆடி ஓணம் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

muslim girls celebrates Onam, Kerala, girl wears hijab, hijab wears students dance, hijab wears students dance in Onam celebrations , viral video, kerala viral video, onam viral video

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தென் மாநிலங்கள் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நடனம் ஆடி ஓணம் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ஹிஜாப் அணிந்த மாணவிகள் நடனம் ஆடி ஓனம் கொண்டாடிய வீடியோ ட்வீட் ஒன்றை லைக் செய்ததையடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தென் மாநிலங்கள் முழுவதும் ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் குறிப்பிட்டுள்ள ட்விட்டர் பயன அசோக் ஸ்வைன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், வண்டூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகையின் போது பல ஹிஜாப் அணிந்த பெண்கள் சேலை அணிந்து தங்கள் வகுப்பு தோழிகளுடன் உற்சாகமாக நடனமாடுகிறார்கள்.

கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை – ஓணம் என்பது கேரள மக்களின் அறுவடை திருநாள் பண்டிகை, இந்து வலதுசாரிகள் கூறுவது போல் இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகை அல்ல. அனைத்து மதத்தினரும் கொண்டாடுகிறார்கள்.

அசோக் ஸ்வைன் பகிர்ந்துள்ள இந்த வீடியோவைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சிலர், மாணவிகள் ஹிஜாப் அணிந்து ஓணம் கொண்டாடிய நிகழ்ச்சியைல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த முஸ்லீம் பெண்கள் சில கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சர்ச்சையுடன் ஒப்பிட்டனர்.

காம்ரேட் மகாபலி என்ற பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் பயனர், “மலப்புரத்தில் உள்ள வண்டூர் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம். ஓணம் ஒரு இந்து பண்டிகை என்று சொல்லும் கீழானவர்களுக்கும் ஹிஜாப் அணிந்து படிக்க மறுத்த நமது அண்டை மாநிலத்திற்கும் சமர்ப்பணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூரில் உள்ள பி.பி. ஹெக்டே கல்லூரியில் கடந்த ஜனவரி மாதம் 6 முஸ்லிம் பெண்கள் தலையில் ஹிஜப் அணிந்து வந்ததால் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் ஹிஜாப் அணிவது குறித்து சர்ச்சை வெடித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Hijab wears girls dance in onam celebrations at school in kerala video goes viral congress mp likes