Advertisment

இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த டாப் 5 விவாதங்கள்!

இன்று ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 நிகழ்வுகள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த டாப் 5 விவாதங்கள்!

நாள்தோறும் நாட்டில் நடக்கும் சூடான விவாதங்கள், நிகழ்வுகள் மறுநாள் செய்திதாளில் வெளிவந்த பின்னரே, அனைவருக்கும் தெரிய வரும் என்ற நிலைமையெல்லாம் மலையேறி போச்சி. அந்தந்த நாள் நாட்டில் என்னனெல்லாம் பரபரப்பாக நடக்குதோ அது எல்லாமே அடுத்த 1 மணி நேரத்திற்குள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும்.

Advertisment

அதை பார்த்தாலே போது, இன்றைய தினம் என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். அந்த வகையில், இன்று ட்விட்டரில் ட்ரெண்டான டாப் 5 நிகழ்வுகள்.

#SterliteProtest

தூத்துகுடியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக  நடைப்பெற்று வரும் ஸ்டெர்லைட் போராட்டம் தான் இன்றும் டிவிட்டரில் ட்ரெண்ட் வரிசையில் இடம்பெற்றுள்ளது.இப்போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்களோடு மக்களாக உட்கார்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

#Muthukaruppan

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை  எதிர்த்து தனது எம்.பி பதவியை ராஜினா செய்வதாக அறிவித்த அதிமுக எம்பி முத்துகருப்பன் தான் ஆட்  ஆஃப்  டே.  முதல்வர் திரைப்படத்தில் ரகுவரன் பேசும் வசனம் போல் “இவரா பாம் வைப்பாராம் இவரா எடுப்பாராம்” என்பது போல், முதலில் இவரே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்போது இவரே முதல்வரின் வேண்டுங்கோளுக்கு இணங்க ராஜினாமாவை வாபஸ் பெற இருப்பதாக கூறி மக்களை குழப்பி வருகிறார்.

#BharatBandh

எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்வதற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், வட மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.இதன் எதிரொலியாக வடமாநிலங்களில் முழு கடையடைப்பு மற்று  போராட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்த கலவரத்தை, கட்டுப்படுத்த அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பான ஹாஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

#SupremeCourt

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புதிய குற்றங்கள் தொடர்பான ஷரத்துகளையும் சேர்த்து, மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.  இந்நிலையில், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த சட்டத்தின்கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகளை பதிவு செய்யவும், கைது நடவடிக்கையை மேற்கொள்ளவும் தடை விதித்து தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பினால் வடமாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. மேலும், பல பஞ்சாப் போன்ற பல இடங்களில் முழு கடையடைப்பு  நடத்தப்பட்டு வருகின்றன. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் எதிரொலியாக நடைபெறும் இந்த கலவரம் தொடர்பான செய்திகள், #SupremeCourt என்ற ஹாஸ்டேக்கில் பகிரப்பட்டு வருகின்றன.

#kaali

சினிமா தொடர்பான ட்விட்டர் ட்ரெண்டிங்கில், விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் காளி திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் லேட்டஸ் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

,

Twitter
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment