மனைவிக்கு எழுதிய இந்த பதிவை படித்தால், பெண்களை இனி கேலி செய்யமாட்டீர்கள்

"நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை கொண்டாட ஒருவன் இருப்பான். நான் என் மனைவியை விரும்புவதுபோலவே உங்களையும் ஒருவன் அப்படியே விரும்புவான்.”

பெண்கள் தங்களுடைய உடல் அளவும், நிறம், உடைகள் ஆகியவற்றின் பெயரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் காலம் இது. விளையாட்டுக்காகவும், சுய மகிழ்ச்சிக்காகவும் பெண்களை கேலி செய்துகொண்டேத்தான் இருக்கின்றனர். எல்லா பெண்களும் ஒரே வடிவத்தில் அடைபட முடியாது. அவர்களுடைய உடல் வடிவத்திற்காக அவர்கள் கேலி செய்யப்படுகின்றனர். குறிப்பாக உடல்பருமனான பெண்கள். எல்லா பெண்களுமே அழகானவர்கள் என்பதை தன் வார்த்தைகள் மூலம் எழுத்தாளர் ராபி ட்ரிப் நிரூபணமாக்கியிருக்கிறார். தன்னுடைய மனைவிக்கு அவர் இன்ஸ்டகிராமில் எழுதிய இந்த பதிவு எல்லா ஆண்களும் நிச்சயம் வாசிக்க வேண்டியது.

“நான் இந்த பெண்ணை காதலிக்கிறேன். என்னுடைய பதின் பருவத்தில் நான் பருமனான, உயரத்தில் குறைந்த, வளைவுகள் கொண்ட பெண்களை அதிகம் விரும்பியதால், என்னுடைய நண்பர்கள் என்னை கேலி செய்தனர். நான் முதிர்ச்சியடைந்த ஆணாக மாறிய பின்பு, பெண்ணியம், ஊடகம் எவ்வாறு பெண்களை காண்பிக்கிறது, அதாவது, ஒல்லியான, உயரமான பெண்களே அழகானவர்களாக காண்பிக்கிறது என்பது குறித்தெல்லாம் தெரிந்துகொண்டேன். ஊடகத்தின் இந்த பொய்யான பிம்பத்தை நிறைய ஆண்கள் நம்புகின்றனர் என்பதை உணர்ந்தேன். ஆனால், எனக்கு இந்த பெண்ணை விட கவர்ச்சியானவர் யாரும் இல்லை. தடிமனான தொடைகள், அழகான இடுப்பு வளைவுகள்,ஆகியவை என்னை கவர்கின்றன. அவருடைய புகைப்படம் ஃபேஷன் இதழ்களில் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால், எனது வாழ்க்கையிலும், இதயத்திலும் அவை இடம் பெற்றுவிட்டது. ஆண்களே, உங்களுக்கு என்ன வேண்டும் என்பது பற்றி சமூகம் என்ன சொல்லிக்கொடுக்கிறது என்பதை மறுயோசனை செய்யுங்கள். ஒரு உண்மையான பெண் என்பவள், ஆபாச பட நாயகியாகவோ, திரைப்பட கதாநாயகியாகவோ இருக்க மாட்டாள். அவளுக்கு அழகான ஸ்ட்ரெச் மார்க் இருக்கும். பெண்களே உங்களை காதலிப்பதற்காகவும், பாராட்டுவதற்காகவும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் உங்களை அடைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை கொண்டாட ஒருவன் இருப்பான். நான் என் மனைவியை விரும்புவதுபோலவே உங்களையும் ஒருவன் அப்படியே விரும்புவான்.”

×Close
×Close