Advertisment

இந்தியர்களின் இட்லி சாம்பார் சண்டை; ட்விட்டரில் திடீரென தீயாய் பற்றி எரிந்தது எப்படி?

தென்னிந்தியர்களின் தினசரி உணவுகளில் ஒன்றான இட்லி சாம்பார் பற்றிய விவாதம் ஒன்று ட்விட்டரில் திடீரென தீயாய் பற்றி எரிந்துள்ளது.

author-image
WebDesk
New Update
idli, idli gate, idli sambar fight in twitter, idli boring dish, idli sambhar debate twitter, இடிலி சாம்பார் சண்டை, ட்விட்டரில் இட்லி சாம்பார் சண்டை, இட்லி, சாம்பார், different kinds of sambhar, idli accompanying dish, food war twitter, tamil indian express news, Trending news

தென்னிந்தியர்களின் தினசரி உணவுகளில் ஒன்றான இட்லி சாம்பார் பற்றிய விவாதம் ஒன்று ட்விட்டரில் திடீரென தீயாய் பற்றி எரிந்துள்ளது.

Advertisment

இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியர்களின் மிகவும் விருப்பமான தினசரி உணவுகளில் ஒன்று இட்லி. இந்த இட்லியை மையமாக வைத்து ட்விட்டரில் ஒரு விவாதம் தீயாய் பற்றி எரிந்து வைரலாகி உள்ளது. ட்விட்டரில் ஒருவர் இட்லி போர் (சலிப்பாகிவிட்டது) அடித்துவிட்டது என்று பதிவிட அதற்கு இட்லி விரும்பிகளான இந்தியர்கள் அதற்கு நீங்கள் நல்ல சாம்பார் வைக்க வேன்டும் என்று பதிலடி கொடுக்க விவாதம் சண்டையாகிவிட்டது.

இந்த சண்டை எல்லாம் எப்படி தொடங்கியது என்றால், இங்கிலாந்தில் வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர், உணவு விநியோக சேவை நிறுவனம் ஒன்று, எந்த உணவு மக்களுக்கு ரொம்ப சலிப்பை எற்படுத்துகிறது என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், “இட்லி தான் உலகில் மிகவும் சலிப்பான உணவு” என்று எட்வர்ட் ஆண்டர்சன் எழுதினார்.

இந்த ட்வீட் விரைவாக நிறைய பேர்களின் கவனத்தை ஈர்த்ததையடுத்து, அவர்கள் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் என இரண்டு விதமாக கருத்து தெரிவித்தனர். ஆனால், இட்லி உணவு விரும்பிகள், ஆன்டர்சனின் கருத்துக்கு உடனடியாக பதிலடி கொடுத்தனர். பலரும் அவருடைய கருத்தை ஒப்புக்கொண்டனர். அதில் பலரும் இட்லியுடன் என்ன பரிமாறப்படுகிறது என்பதைப் பொருத்து உள்ளது என்று பதில் அளித்தனர்.

ஆண்டர்சன் கருத்துக்கு பதிலளித்த வருண் கிருஷ்ணன் என்ற ட்விட்டர் பயணர் “அவருக்கு யாராவது உண்மையான இட்லியைக் கொடுங்கப்பா” என்று பதில் அளித்துள்ளார்.

பிரிஜேஷ் கலப்பா என்ற ட்விட்டர் பயனர், நீங்கள் இட்லி சாப்பிடும்போது கோழிக்கறி, ஆட்டுக்கறி குழம்பு சாப்பிட்டது இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

மற்றொருவர் நீங்கள் சாப்பார் நெய்யில் ஊறவைத்த மினி இட்லியை சாப்பிட்டிருக்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.

ஒரு இங்கிலாந்து பேராசிரியர் ட்விட்டரில் இட்லி போரடிக்கிறது என்று சொன்னதுக்காக இட்லி பிரியர்கள் ட்ரோல் செய்ததால் ஒரு போரே நடந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment