பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மூன்றாவது திருமணம்!

இம்ரான் தற்போது மூன்றாவது திருமண பந்தத்தில் இணைந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மூன்றாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இம்ரான் கானுக்கும், ஆன்மீக ஆலோசகர் புஷ்ரா மனேகாவுக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்ததாகவும், அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக வதந்திகள் பரப்பட்டன. இந்த தகவலுக்கு இம்ரான் கான் மறுப்பு தெரிவித்து வந்தார். மேலும், நான் திருமணம் செய்துக் கொண்டால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன் என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று(18.2.18) இம்ரான் கான் – புஷ்ரா மனேகாவுக்கு லாகூரில் திருமணம் நடைபெற்றதாக, மனோகாவின் சகோதோரர் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடத்தப்பட்டதாகவும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், “திருமணம் என்பது இரு இதயங்கள் இணையும் பந்தம். இம்ரான் கான் திருமண வாழ்க்கை சிறக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இம்ரானின் இந்த திருமணம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இம்ரான் கான் மூன்றாவதாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு இருப்பது எந்தவிதத்தில் சரியானது? என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.

 

இர்மான்கான் 1995 ஆம் ஆண்டு ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற அயல்நாட்டு பெண் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்தின் மூலம் இம்ரானுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால், 9 வருடங்களுக்கு பிறகு இருவரும் விவகாரத்து பெற்றுக் கொண்டு சட்டப்படி பிரிந்தனர். அதன் பின்பு, இம்ரான் 2015 ஆண்டு ரீசும் கான் டிவி தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்தார். 10 மாதங்கள் கழித்து இந்த பெண்ணுடனும் இம்ரான்கானுக்கு விவகாரத்து நடந்தது.

இரண்டு திருமணங்களும் வெற்றி பெறாத நிலையில், இம்ரான் தற்போது மூன்றாவது திருமண பந்தத்தில் இணைந்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close