இந்திய அணியின் நியூ ஜெர்சி: ”அட நம்ப ஸ்வீகி பாய்ஸ் யூனிஃபார்ம் பா” நெட்டிசன்கள் மரண கலாய்.

நெட்டிசன்கள் அடிக்கும் லூட்டி ஒரே அலப்பறை தான்

India’s New Jersey memes : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தனது 7வது ஆட்டத்தை இங்கிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது இந்திய அணி. சர்வதேச போட்டிகளில் களம் காணும் இரு அணிகளும் ஒரே நிற ஜெர்சியை அணியக்கூடாது என ஐ.சி.சி புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, நடப்பு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்நாட்டு வீரர்கள் ஜெர்சியை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. அதனால் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் இன்று களமிறங்கவுள்ளன. இதற்கான புதிய நிற உடையை ட்விட்டரில் நேற்று வெளியிட்டது பி.சி.சிஐ.

மேலும் படிக்க – India vs England Live Score: இந்தியா vs இங்கிலாந்து லைவ் கிரிக்கெட் ஸ்கோர்

இதுவரை நீல நிற ஜெர்சியில் மட்டுமே பார்த்த இந்திய வீரர்களை ஆரஞ்சு நிறத்தில் இந்திய ரசிகர்கள் இன்று பார்க்கவுள்ளனர். ஆரஞ்சு நிற ஜெர்சியை கலாய்த்து நேற்றே ரசிகர்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை பறக்கவிட தொடங்கிவிட்டனர். மிரண்டா பாட்டில், ஸ்வீகி பாய்ஸ் யூனிஃபார்ம், போர்ன்விட்டாய் என நெட்டிசன்கள் அடிக்கும் லூட்டி ஒரே அலப்பறை தான்.. நீங்களும் அதை கொஞ்சம் பாருங்களேன்.

வழக்கம் போல் இந்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புதிய நிற ஜெர்சி குறித்து இந்தியன் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் நீல நிற ஜெர்சி அணியும் போது இன்னும் பெருமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close