காது கேட்கும் திறனை இழந்த 4 மாத குழந்தை, காது கேட்கும் உபகரணத்தின் உதவியுடன் தாயின் குரலை கேட்ட மகிழ்ச்சியில் தெரிவிக்கும் முகபாவங்கள், சிரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய வீடியோ, பார்ப்பவர்களின் மனதை கொள்ளை கொள்வதாக அமைந்துள்ளது.
பால் அடிசன் தம்பதிக்கு, ஜார்ஜியானா, மகளாக பிறந்தாள். பிறக்கும்போதே செவிக்குறைபாடுடன் பிறந்ததால், பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர். இந்நிலையில் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், பால் அடிசன், பிறந்த 4 மாதங்களே ஆன ஜார்ஜியானாவின் 2 காதுகளிலும், காது கேட்க உதவும் உபகரணத்தை பொருத்தினார்.
ஜார்ஜியானாவின் தாய், ஹலோ என்று சொன்ன உடனே சிரிப்பை உடனடியாக பரிசளித்த சுட்டி குட்டி, பின் பல்வேறு முக பாவனைகள் மற்றும் சத்தங்களால், அன்றைய காலைப்பொழுதை, இனிமையான காலையாக மாற்றினார்.
ஜார்ஜியானாவின் இந்த முகபாவனைகள் மற்றும் சத்தங்கள் அடங்கிய வீடியோவை, பால் அடிசன் சமூகவலைதளத்தில் பதிவேற்றினார். இந்த வீடியோ, பார்ப்பவர்களின் மனங்களை எல்லாம் கொள்ளை கொள்ளவே, இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஜார்ஜியானாவின் செயல்களை பலவாறாக வர்ணிப்பதோடு மட்டுமல்லாது, பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.