வைரலாகும் வீடியோ: கிரிக்கெட் வீரர் வீட்டில் பிரியாணியை ஒரு பிடி பிடித்த விராட் கோலி!!

பெங்களூர் அணி கேப்டன்,  விராட் கோலி மற்றும் அணி வீரர்கள் ஆகியோர் முகமது சிராஜ் வீட்டில் பிரியாணி  விருந்தை ரசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத் பிரியாணி என்பது ஒரு உலக ஃபேமஸ். ஐதரபாத் சென்று வரும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் அதை மிஸ் பண்ணாமல் டேஸ்ட் செய்து விட்டு தான் வருவார்கள். அந்த வாய்ப்பு இப்போது கோலிக்கும் கிடைத்து இருக்கிறது. கடந்த 7 ஆம் தேதி ஐதராபாத்தில் பெங்களூர் அணி மற்றும் ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதிக் கொண்டன.

கடந்த ஆண்டு ஐதரபாத் அணியில் இடம்பெற்றிருந்த முகமது சிராஜ், இந்த முறை பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ளார். சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சிராஜ், சிறப்பாகவே பந்துவீசினார். இருப்பினும், ஆர்சிபியால் வெற்றி பெற முடியவில்லை.

ஆனால். இந்த போட்டிக்கு முந்தைய நாள் இரவு, சிராஜ் தனதுய் வீட்டில் பெங்களூர் அணி வீரர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து அளித்துள்ளார். ஐதரதாப் பிரியாணிட்யை தனது வீட்டிலியே சமைத்து வீரர்களுக்கு பரிமாறி உள்ளார். இந்த விருந்தில், கேப்டன் விராட் கோலி மற்றும் பெங்களூர் அணி வீரர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

ஐதரபாத் பிரியானியை செம்ம டேஸ்ட் என்று ரசித்தப்படி, கோலி அண்ட் கோ சாப்பிட்டது என்னால் மறக்கவே முடியாத தருணம் என்று சிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close