scorecardresearch

என்னது விசில் அடிக்க ஆள் பத்தலயா… இணையத்தை கலக்கும் ஐபிஎல் மீம்ஸ்!

Today’s latest trending IPL Tamil memes: தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் குறித்த சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

IPL Memes Tamil, today trending tamil memes

IPL Memes Tamil: இந்தியாவில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திருவிழா கலைகட்டியுள்ளது. கடந்த 26ம் தேதி சனிக்கிழமை முதல் போட்டிக்கான லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட நிலையில், கொல்கத்தா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. இதேபோல் ஞாயிற்று கிழமை மாலை 3:30 மணிக்கு நடந்த 2வது லீக் ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்ட மும்பை தோல்வியுற்றது.

தொடர்ந்து இரவு 7:30 மணிக்கு நடந்த 3வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட பெங்களூரு அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்த நிலையில், பந்துவீச்சில் சொதப்பி எளிதில் வெற்றி பெற வேண்டிய ஆட்டத்தை கோட்டை விட்டது.

மும்பை, சென்னை போன்ற சம்பியன்கள் அணிகள் தொடரின் முதல் போட்டியிலே தோல்வியுற்று இருப்பது ரசிர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த சம்பவங்களை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள், இது குறித்த சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் ஐபிஎல் கிரிக்கெட் மீம்ஸ்:

இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:

சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Ipl memes tamil today trending tamil memes

Best of Express