Advertisment

’நாங்கள் இருக்கிறோம்’ அழுத சிவனை கட்டியணைத்து தேற்றிய பிரதமர் மோடி வீடியோ!

மோடியின் உரை முடியும் போதே இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
isro sivaan pm modi viral video

isro sivaan pm modi viral video

isro sivaan pm modi viral video : சந்திராயன் 2 கடைசி நேர தோல்வியை கண்டு கலங்கிய இஸ்ரோ சிவனை, பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து ஆறுதல் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நேற்று இரவு நிலவின் தரைதளத்தை தொடும்போது அதன் தொடர்பை இழந்தது. இந்த கடைசி நேர தோல்வி இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சந்திரயான் 2 திட்டத்தின் முக்கியமான லேண்டர் தரையிறங்கும் நிகழ்வானது இன்று அதிகாலையில் நடந்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பில் சுமார் 2.1 கிமீ உயரத்தில் வரும் போது லேண்டரின் தரைத்தளத்துடனான சிக்னல் தொடர்பு துண்டானது. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இந்த அறிவிப்பை அவர் வெளியிடும் போதே அவர் மனமுடைந்து இருந்தது நன்கு தெரிந்தது.

சிக்னல் தொடர்பு துண்டான போது விஞ்ஞானிகள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.இதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுபாட்டு அறையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தி, நம்பிக்கையுடன் இருங்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தாய் நாட்டுக்காக வாழ்கின்ற இஸ்ரோ விஞ்ஞானிகளை பார்த்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர்.

விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப் படுகிறோம், தோல்வி நிரந்தரமில்லை - மோடி ட்வீட்

கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல். நம்பிக்கை இழக்க வேண்டாம். நமது விண்வெளி திட்டம் குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளவேண்டும். நானும் நாடும் உங்களுடனே இருப்போம்" என்று ஆறுதல் கூறினார்.

இந்த உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து மோடி புறப்பட தயாரானர். மோடியின் உரை முடியும் போதே இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் இஸ்ரோ தலைவர் சிவனும் ஒருவர். மோடி வெளியில் வந்த போது அவரை கட்டியணைத்து அழுதார். பதிலுக்கு மோடியும் சிவனை தனது தோளில் தேற்றி ஆறுதல் கூறினார். இதனை பார்த்த அருகில் இருந்த விஞ்ஞானிகளும் கண்ணீர் சிந்தினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment