Advertisment

உங்கள் கண்களை உங்களாலே நம்ப முடியாது.. மனிதனின் உயரத்திற்கு நிகரான அதிசய ஜெல்லி மீன்!

இந்த சைஸில் இதுவரை யாருமே ஜெல்லி மீனைப் பார்த்ததில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jellyfish shocking video

jellyfish shocking video

jellyfish shocking video : ஜெல்லி மீன்களே என்றாலே குழந்தைகளுக்கு அவ்வளவு இஷ்டம். பார்ப்பதற்கே அவ்வளவு அழகாகவும், குட்டியாகவும் க்யூட்டாகவும் இருக்கும் ஜெல்லி மீன்களை தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.

Advertisment

ஏன் இதுவரை வெளிவந்த ஜெல்லி மீன்கள் சம்பந்தப்பட்ட ஹாலிவுட் படங்களில் கூட ஜெல்லி மீன்கள் அப்படித்தான் காட்டப்பட்டுள்ளன.ஆனால் முதன்முறையாக கண்களை விரியசெய்யும் அளவிற்கு மனிதனின் உயரத்திற்கு நிகரான அதிசய ஜெல்லி மீனை அருகில் பார்த்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரியிலாளர் லிஸ்ஸி டாலி.

சமீபத்தில் இவர் தனது புகைப்படகலைஞருடன் இங்கிலாந்தின் ஆழ்க்கடலுக்கு ஆராய்ச்சி தொடர்பாக சில மீன்களை காண சென்றார். அப்போது ஆளுயர் என அழைக்கப்படும் அதிசய ஜெல்லி மீன் ஒன்று அவரின் கண்களுக்கு தெரிந்து உள்ளது.

லிஸ்ஸிக்குப் பக்கத்தில் சென்ற அந்த ஜெல்லி மீனை புகைப்படகலைஞர் அபாட் அழகாக அப்படியே படம் எடுக்க அதன் மிக மிக அழகான படமாக மாறியது. கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலான புகைப்படம் என்றால் அது இதுதான்.

பாரல் ஜெல்லி மீன்கள், பிறக்கும்போது ஒரு மில்லி மீட்டர் அளவு உயரம்தான் இருக்குமாம். அவை, தொடர்ந்து வளர்ந்து ஆள் உயரத்துக்கு வருமாம். பாரல் ஜெல்லி மீனைப் பார்த்து, படம்பிடித்த மொத்த அனுபவம் புகைப்படத்துடன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

SO THIS JUST HAPPENED???????? Diving with a giant barrel jellyfish! I could not think of a better way to celebrate the end of #WildOceanWeek. The full video of the dive is LIVE right now! I'll put the link in my stories if anybody wants to spend just two minutes watching this breathtaking moment coming face to face with a barrel jellyfish THE SAME SIZE AS ME while diving off of the coast of Falmouth ???? What an unforgettable experience, I know barrel jellyfish get really big in size but I have never seen anything like it before! For anybody who is in Cornwall do come on down to Maenporth tomorrow at 12pm for a beach clean. There should be a good crowd of us rounded up now so it will be fun - and it will be followed by a small talk about the trip! Thank you Wild Ocean Week and of course the @sharkman_dan for the incredible footage ????????

A post shared by Lizzie Daly (@dalylizzie) on

அதில் அவர் கூறியிருப்பதாவது, “ அரை மணி நேரமாக அங்குதான் நீந்திக்கொண்டிருந்தோம். திடீரென இவ்வளவு பெரிய ஜெல்லி மீன் வருமென நினைக்கவேயில்லை இந்த சைஸில் இதுவரை யாருமே ஜெல்லி மீனைப் பார்த்ததில்லை.திடீரென்று கிடைத்த அந்த அனுபவம் அலாதியானது

மிகவும் அழகாக, சாந்தமான, மெதுவாக நகரும் அந்த அசாத்திய உயிரனத்தைப் படம்பிடித்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment