Advertisment

“மவோரி டாட்டூவுடன்” செய்தி வாசிப்பாளர்; பூர்வகுடிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கிய நியூஸ் சேனல்

நியூசிலாந்து நாட்டில் உள்ள மாவோரி இன பெண்கள் தங்களின் கீழ்தாடைகளில் ”மோக்கோ காவூவே” (moko kauae) என்ற பச்சை குத்திக் கொள்வது வழக்கம். நியூஸ்ஹப் லைவ் நிகழ்ச்சியில் 6 மணி செய்தி வாசிப்பாளராக அவர் இடம் பெற, அவர் செய்தி வாசித்ததே வைரல் செய்தியாக பரவியது.

author-image
WebDesk
New Update
Journalist makes history as first person with Maori face tattoo

Journalist makes history as first person with Maori face tattoo: பழங்குடி மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் பொது சமூகத்திடம் இருந்து விலகியே இருக்கும். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருக்கும் பழங்குடியினர் அனைவரும் இத்தகைய பழக்கவழக்கங்களை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். சமீபத்தில் நியூசிலாந்து நாட்டில் உள்ள மாவோரி பழங்குடி இனப்பெண் கைபாராவை செய்தி வாசிப்பாளராக புகழ்பெற்ற செய்தி நிறுவனம் ஒன்றில் உயர்ந்துள்ளார்.

Advertisment

நியூசிலாந்து நாட்டில் உள்ள மாவோரி இன பெண்கள் தங்களின் கீழ்தாடைகளில் ”மோக்கோ காவூவே” (moko kauae) என்ற பச்சை குத்திக் கொள்வது வழக்கம். நியூஸ்ஹப் லைவ் நிகழ்ச்சியில் 6 மணி செய்தி வாசிப்பாளராக அவர் இடம் பெற, அவர் செய்தி வாசித்ததே வைரல் செய்தியாக பரவியது.

யாரு வம்பு தும்புக்கும் போறதில்ல.. நமக்கு தானா இப்படி எல்லாம் நடக்கணும்?- பயணிகளை பீதி அடைய வைத்த பெண் புலி

2017ம் ஆண்டு அவருடைய டி.என்.ஏ. சோதனைகள் அவர் முழுமையான மவோரி இனத்தை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்த நிலையில் moko kauae பச்சையை உதடுகளிலும் கீழ் தாடையிலும் குத்திக் கொண்டார். moko kauae பச்சை குழந்தையில் இருந்து இளம் வயது பெண்ணாக மாறும் பருவத்தை பறைசாற்றும் அடையாளமாக பார்க்கப்படுகிறாது.

2019ம் ஆண்டு டி.வி. என்.இசட் சேனலில் பணியாற்றிய அவர் பிறகு நியூஸ் ஹப் லைவில் பணியாற்ற துவங்கினார். “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை நான் மிகவும் விரும்பி செய்கிறேன்” என்று கூறினார். நான் ஊடகத்துறைக்கு வந்த போது இருந்த அழுத்தம் இங்கே நான் பணியாற்றும் போது இல்லை என்றும் கைபாரா தெரிவித்துள்ளார். இருமொழி செய்தியாளராக இருக்கும் அவர் தன்னுடைய பணி நேரங்களில் தங்களின் இனமொழியான டே ரேவோடு (Te Reo) ஆங்கிலத்திலும் செய்தி வாசிக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment