லோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்!

iஇதுவே உண்மையான "me too" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் வங்கி கடன் கேட்ட பெண்ணை, தன்னுடன் உறவு கொள்ள வங்கி மேலாளர் அழைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் மேலளாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தவன்கரே நகரில் வங்கி கடன் கேட்ட பெண்ணிடம், தன்னுடன் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளரை பெண் ஒருவர் ரோட்டில் வைத்து அடித்து உதைத்தார்.

பெண் ஒருவர் ரூ.15 லட்சம் கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர், கடன் தொகைக்கு ஒப்புதல் கையெழுத்து போட வேண்டுமென்றால் தன்னுடன் உறவு கொள்ளுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார்.

வேகமாக பரவி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் வங்கி மேலாளரை சட்டையை பிடித்து இழுத்து வந்து, அடித்து, உதைத்து கட்டையால் தாக்கி கீழே தள்ளி விடுகிறார். மேலும் தனது செருப்பை கழட்டியும் அடிக்கிறார். 50 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் அந்த பெண் வங்கி மேலாளரை தன்னுடன் காவல் நிலையம் வருமாறு வற்புறுத்துகிறார்.

இதை பெண்ணுடன் வந்த மற்றொரு உறவினர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பெண்ணின் இந்த துணிச்சலான செயலுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் 25,000 பேரால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் அதில் அனைவரும் அந்த பெண்ணை ஆதரித்து, அவரது தைரியத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதுவே உண்மையான “me too” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close