ஒரு வயதே ஆன கியூட் குட்டி குழந்தை கோப் செஃப் உடையில் சமையல் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்களையும் நெட்டிசன்களையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.
இந்த கொரோனா பொது முடக்க காலத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக ஊடகங்களில் பொழுதுபோக்கு வீடியோக்களும், விழிப்புணர்வு வீடியோக்களும் வேடிக்கையான வீடியோக்களும் நிரம்பி வழிகின்றன.
பொழுதுபோக்கு என்ற பெயரில் வெளியாகும் பல வீடியோக்கள் சலிப்பை ஏற்படுத்தினாலும், அரிதாக வெளியாகும் சில வீடியோக்கள் மனதை உற்சாகப்படுத்தி அவை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்து மேலும் உற்சாகமடையச் செய்யும்.
அந்த வகையில், ஒரு வயதே ஆன குழந்தை கோப் சமையல் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இன்னும் மழலை மொழி மாறாத தத்தி தவழும் குட்டி குழந்தை கோப் சமையல் கலைஞர் உடையில் அழகாக சமைக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமைக் கலக்கி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் கோப் ஈட்ஸ் என்ற பெயரில் உள்ள கணக்கை குழந்தை கோப்பின் பெற்றோர் ஆஷ்லே – கைல் நிர்வகிக்கிறனர். கோப் இன்ஸ்டாகிராம் கணக்கு, 2020 பிப்ரவரி 25-ம் தேதி கொரோனா அச்சுறுத்தலால் பொது முடக்கம் தொடங்கிய காலத்தில் தொடங்கப்பட்டது. கோப் பெற்றோர்கள் ஆஷ்லே – கைல் தங்கள் ஒரு வயது சுட்டி குழந்தை கோப்புக்கு அழகான செஃப் உடை அணிந்து, குட்டி குழந்தை சமையல் செய்கிற வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கோப்பின் ஒவ்வொரு வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து பகிர்கின்றனர். கோப் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
குட்டி செஃப் குழந்தை கோப்பின் மனதைக் கொள்ளை கொள்ளும் சிரிப்பும் சுட்டித்தனமான செய்கைகளும் பார்ப்பவர் எவரையும் கவர்ந்து விடுகின்றன. இதனால், கோப்பின் ஒவ்வொரு வீடியோவும் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி விடுகிறது.
ஒரு வீடியோவில், குழந்தை கோப், உருளைக் கிழங்கை எடுத்து காட்டுகிறான். அதனை பெற்றோர்கள் தோல் உரித்து தருகின்றனர். அதை கோப் காட்டுகிறான். பின்னர் உருளைக் கிழங்கை துண்டுகளாக நறுக்கியதைக் கட்டுகிறான். பின்னர், ஒரு பாத்திரத்தில் சாஸ் ஊற்றுகிறார்ன். வானலில் சீஸ்களை வீட்டு வறுக்கிறான். குழந்தை கோப்பின் ஒவ்வொரு செய்கையையும் கண்டு நிச்சயமாக நீங்களும் உற்சாகமடைவீர்கள்.
அநேகமாக உலகின் இவ்வளவு குட்டி செஃப் கோப் ஆகத்தான் இருப்பார். குட்டி செஃப் கோப்பின் சுட்டித் தனமான சமையல்களைப் பாருங்கள்.