உசுரு மேல பயம் இருக்குற யாரும் இந்த சலூனுக்கு போக மாட்டாங்க தான்!

இங்க ஒருத்தர் அதுக்கும் மேல போய், கத்தி, சுத்தியல், ஒடைஞ்சு போன கண்ணாடி, நெருப்புன்னு எறங்கிட்டாரு. நாம கூட இது ஹரி பட செட்டா இருக்குமோன்னு நெனச்சுட்டு பாத்தா அது தான் இல்லை.

Lahore barber uses fire, hammer to style hair, video goes viral

நம்ம ஊரு பசங்கள பாத்தாலே தெரியும். நாலு ஹேர்ஸ்டைலுக்கு மேல ஒன்னும் தெரியாது… வைச்சா குடுமி எடுத்தா மொட்டை அப்டி தான் இருப்பாங்க… இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பாலிவுட், ஹாலிவுட் படமெல்லாம் பாத்து ட்ரெண்ட்டுக்கு ஏத்த மாதிரி மாறி வர்றாங்க… கிருதாக்கு மேல கம்புளி பூச்சி ஊறுர ஸ்டைலாம் வேற ரகம் தான்… இப்டி ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி நம்ம பசங்க மாற, நம்ம சலூன்க் கடை அண்ணங்களும் மாறி தான் போய்ட்டாங்க….

செம்ம சூப்பரா ஹேர் கலரிங், விதவிதமான ஹேர் ப்ரோடெக்ட்ஸ்னு நம்ம பசங்களுக்காக அள்ளி கொண்டு வந்து குவிக்குறாங்க… ஆனா பாருங்களேன், இங்க ஒருத்தர் அதுக்கும் மேல போய், கத்தி, சுத்தியல், ஒடைஞ்சு போன கண்ணாடி, நெருப்புன்னு எறங்கிட்டாரு. நாம கூட இது ஹரி பட செட்டா இருக்குமோன்னு நெனச்சுட்டு பாத்தா அது தான் இல்லை.

பாகிஸ்தானோட லாகூர்ல இருக்குற அப்பாஸ் தான் இந்த மாதிரியான அதி அற்புத கலையெல்லாம் சலூன் கடைக்குள்ள இறக்கிருக்கான்னே சொல்லலாம். தல, முடி வெட்டுற ஸ்டைல்ல பாத்து கடைக்கு முன்னாடி பொண்ணுங்க கூட்டமும் அலை மோதுதுன்னு தான் சொல்றாங்கப்பா…

இந்த வீடியோவ நீங்க பாருங்க… தமிழ்நாட்டுல எந்த இடத்துலயாவது பாகிஸ்தான் “ப்ரோக்கு” நிகரா முடிவெட்ற கடை இருந்தா கீழ கமெண்ட்ல தெரிவிங்க… இன்னைக்கு தேதில அப்பாஸ் தல தான் வைரல் ஹிட் அடித்த ட்ரெண்ட் செட்டர் அப்டினா அதுல ஆச்சரியப்பட ஒன்னுமே இல்லை. நாளைக்கே நீங்க பாகிஸ்தான் போனா, அப்பாஸ் கடைக்கு நிச்சயம் போகனும்… உசுரு மேல பயம் இருக்குறவங்க வீடியோவ மட்டும் எஞ்சாய் பண்ணுங்க பாஸ்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lahore barber uses fire hammer to style hair video goes viral

Next Story
காமராஜுக்கு குரல் கொடுத்த இளம் நடிகை: வைரல் ஆகும் ஸொமட்டோ ஊழியர்Viral tamil news Bollywood actress Parineeti Chopra supports zomato delivery boy
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express