Advertisment

மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து உறுமிய சிறுத்தை; வைரல் வீடியோ

மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவில் சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டதால், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரிக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

author-image
WebDesk
New Update
leopard entered into medical college, leopard walks in medical college, karnataka, மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை, சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி, கர்நாடகா, சிறுத்தை, வைரல் வீடியோ, cheetah, samrajnagar medical college, leopard, viral video, tamil viral news, tamil video news மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து உறுமிய சிறுத்தை; வைரல் வீடியோ

கர்நாடாக மாநிலம், சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து நடந்து செல்லும் சிசிடிவி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் கர்நாடகா மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

கர்நாடாகாவின் பந்திப்பூர் வனப்பகுதியையொட்டி, எடபெட்டா மலைப்பகுதியில் சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி கட்டடத்துக்குள் புதன்கிழமை நள்ளிரவில் சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டதால், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரிக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை ஒன்று மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்து அங்கும் இங்குமாக அலைந்தது தெரியவந்தது. சிறுத்தை மருத்துவக் கல்லூரிக்குள் புகுந்து நடந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

அந்த சிசிடிவி வீடியோவில், சாம்ராஜ் நகர் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை வழி தெரியாமல் அறைக்குள் புகுவதும் படிக்கட்டு வழியாக வெளியே செல்வதும் பதிவாகியுள்ளது.

மருத்துவக் கல்லூரிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி வீடியோ மூலம் இருப்பது தெரியவந்ததையடுத்து, மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுத் தங்கும் அறையிலிருந்து வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

சிறுத்தை நடமாட்டம் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிக்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையைத் தேடிப் பார்த்தபோது, அது மருத்துவக் கல்லூரிக்குள் இருந்து மற்றொரு வழியாக வெளியேறியது தெரியவந்தது. இருப்பினும், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் மருத்துவக் கல்லூரிகள் சிறுத்தை நுழைந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Video Karnataka Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment