Advertisment

அட ஆபத்துன்னு உதவி செய்ய வந்த ரொம்பத்தான் - ரொம்ப பாசக்கார சிங்கமா இருக்குதே

இது போன்ற இக்கட்டான சூழலில், வண்டியில் சுற்றுலாப் பயணிகள் இத்தனை பேர் இருக்கும் போது பதட்டம் அடையாமல் அமைதியாக செயல்பட்ட பாதுகாவலரின் பணி பாராட்டத்தக்கது என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Lion plays tug of war with safari jeep full of tourists

Lion plays tug of war: தென்னாப்பிரிக்காவின் கிரேட்டர் க்ருகெரில் உள்ள பாவோபாப் ரிட்ஜில் சவாரி சென்ற குழு ஒன்றின் கார் நடுக்காட்டில் சிக்கிக் கொண்டு தவிக்க, எதிர்பாராத நேரத்தில் சிங்கம் ஒன்று அந்த வண்டியுடன் இணைக்கப்பட்டுள்ள கயிறு ஒன்றை இழுத்து அவர்களுக்கு உதவ முற்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

கேம் லாட்ஜ் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்ட போஸ்ட் ஒன்றில், பூனைகள் எப்போதும் பூனைகள் தான். இன்று எங்களுக்கு உதவ வந்தது யார் என்று பாருங்கள் என்ற கேப்ஷனுடன் வீடியோவை வெளியிட்டுள்ளது. வண்டி கொஞம் முன்னே நகர்ந்த போதும் கூட சிங்கம் அந்த கயிறை இழுத்து வரும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இது போன்று கவனக்குறைவாகவா செயல்படுவது? மிருகங்களுக்கு தொந்தரவு தரும் வகையில் இது அமைந்துள்ளது என்று விலங்கு நல ஆர்வலர்கள் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ள நிலையில், காரில் இருந்து அந்த கயிறை அகற்றுவதற்கு முன்பு சிங்கம் அங்கே வந்துவிட்டது. எந்த பூனை இனமாக இருந்தாலும் இப்படி தான் செய்திருக்கும். சிங்கத்திற்கு எந்தவிதமான அச்சுறுத்தலையும் தங்களின் நிறுவனமோ நிறுவன ஊழியர்களோ ஏற்படுத்தவில்லை என்று கூறிப்பிட்டுள்ளது கேம் லாட்ஜ். இது போன்ற இக்கட்டான சூழலில், வண்டியில் சுற்றுலாப் பயணிகள் இத்தனை பேர் இருக்கும் போது பதட்டம் அடையாமல் அமைதியாக செயல்பட்ட பாதுகாவலரின் பணி பாராட்டத்தக்கது என்றும் பலர் தங்களின் கருத்துகளை பதிவு செய்திருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment