வைரலாகும் வீடியோ: சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர்!

எப்போதும் நடக்கும் கூட்டத்தின் நினைவில் இந்தச் சிற்றுண்டியைச் சாப்பிட்டதாக விவரித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் சிலர்,  சிப்ஸ் மற்றும்   சில இனிப்பு பண்டங்களை சாப்பிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, நடைப்பெற்ற  நாடாளுமன்ற கூட்டத்தின் இரண்டாவது அமர்வில்    எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில்  ஈடுப்பட்டதால் கூட்டத்தொடர்  முழுமையாக முடங்கியது.

அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உட்பட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து ஒரு மாத காலமும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் முற்றிலும் முடங்கி அலுவலக வேலைகள் எதுவும் நடைபெறவில்லை.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியதை கண்டித்து பிரதமர் மோடி மற்றும் பாஜக சார்பில் அனைத்து மாநிலங்களிலும்  உண்ணாவிரதம் போராட்டம் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக எம்.பிக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் தங்கள் வேலைகளை செய்துக் கொண்டே உண்ணாவிர போராட்டத்தில் ஈடுடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

புனே நகரில் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அந்த பகுதி பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பாஜக் நிர்வாகிகள் என பலர் கலந்துக் கொண்டனர். இதே கூட்டத்தில் அவர்கள்  உண்ணாவிரதம் இருப்பதாகவும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தெரிவித்திருந்தனர்.

அப்போது பாஜக எம்எல்ஏக்களான பீமாராவ் தப்கிர் மற்றும் சஞ்சய் பிகாடே ஆகிய இருவரும், கூட்டத்தில் பேசிக் கொண்டே சிப்ஸ் மற்றும் இனிப்பு பண்டங்களை எல்லாரு முன்னிலையிலும் சாப்பிட்டனர். இது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிறகு, பேசிய அந்த எம்.எல்.ஏ-க்கள் எப்போதும் நடக்கும் கூட்டத்தின் நினைவில் இந்த உணவுகளை சாப்பிட்டதாக விவரித்தார்.

 

அதே நேரத்தில், பாஜகவினர் சிப்ஸ் சாப்பிட்டதை அங்கு இருந்தவர்கள்  வீடியோவாக எடுத்திருந்தனர். இந்த வீடியோ  தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

×Close
×Close