உயிரை பணயம் வைத்து உதவி: பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் இளைஞர் வீடியோ

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்கிற இதே நாட்டில்தான் பெண்கள் பாம்புக்கு பால் வார்க்கிறார்கள். அந்த வரிசையில் இந்த இளைஞர் தாகத்தில் தவிக்கும் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோவைப் பாருங்கள்.

man gives drinking water to snake, man gives water to snake, youth gives water to snake, பாம்புக்கு தண்ணீர் கொடுத்த இளைஞர், வீடியோ, பாம்பு, தமிழ் வைரல் நியூஸ், பாம்பு வீடியோ, viral video, snake viral video, snake dringking video, snake watr drinking video, tamil viral news, tamil viral video news

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால், அதே பாம்பு தாகத்தில் தவிக்கும்போது இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து பாம்புக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு நாளும் பல விலங்குகள் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று இளைஞர் ஒருவர் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

இந்தியாவில் பாம்பை தெய்வமாக வணங்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் பாம்புக்கு பால் வைப்பதை பலரும் பார்த்திருப்பீர்கள். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். வாழை மரங்கள் நிறைந்த பகுதியில் நஞ்சுகொண்ட பாம்பு ஒன்று தாகத்துடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த இளைஞர் ஒருவர் அருகே சென்று வாட்டர் கேனில் உள்ள தண்ணீரை அந்த பாம்புக்கு குடிக்க கொடுக்கிறார். அந்த பாம்புவும் அந்த இளைஞர் ஊற்றும் தண்ணீரை வாட்டர் கேனில் இருந்து அப்படியே குடிக்கிறது.

இளைஞர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து அன்புடன் பாம்புக்கு தண்ணீர் வார்க்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து சுசந்தா நந்தா ஐஎஃப்எஸ் குறிப்பிடுகையில், அன்பும் தண்ணீரும் வாழ்க்கைக்கு தேவையான இரண்டு சிறந்த விஷயங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்கிற இதே நாட்டில்தான் பெண்கள் பாம்புக்கு பால் வார்க்கிறார்கள். அந்த வரிசையில் இந்த இளைஞர் தாகத்தில் தவிக்கும் பாம்புக்கு தண்ணீர் வார்ப்பதையும் பாருங்கள். இளைஞர் பாம்புக்கு தண்ணீர் தருவதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man gives drinking water to snake viral video

Next Story
‘அலி பாய் அப்டேட் எப்போ’ – வைரலாகும் அஜித் ரசிகரின் வீடியோViral news tamil India vs England Chennai fans ask Moeen Ali for update on Ajith's upcoming movie Valimai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com