Advertisment

ஜிம்மில் 181 கிலோ வெயிட்டை தூக்கிய பெண் மரணம்… மகள் கண்முன்னே நிகழ்ந்த சோகம்

ஜிம்மில் கொரில்லாவின் எடைக்கு சமமான வெயிட்டை தூக்கியபோது பெண் இறந்த சம்பவம் மெக்சிகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
உடற்பயிற்சியை எந்த வயதிலிருந்து செய்யத் தொடங்கலாம்?

வெயிட் லிப்டிங் செய்வது ஜிம் செல்வோரின் வாடிக்கையான செயல் ஆகும். ஆனால், மெக்சிகோவில் பெண் ஒருவர், கோரில்லா எடைக்கு சமமான பார்பேல்லை தூக்கிய போது மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மெக்சிகோவில் உள்ள உள்ளூர் ஜிம்மில் உடற்பயிற்சிக்காக வந்த பெண், 400lb (சுமார் 181 கிலோ) எடையை வெயிட் லிப்ட் செய்திருக்கிறார். ஆனால், அப்போது அதிகளவில் எடையை தூக்கமுடியாததால் நிலை தடுமாறியதில் அவர்மீதே வெயிட் விழுந்திருக்கிறது. கழுத்தில் பார்பேல் விழுந்ததால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரத்தின் பேரல்வில்லோ பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் முதல், இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றனர்.

வீடியோ காண விரும்புவோர் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்: https://twitter.com/c4jimenez/status/1496321097083625481

அந்த வீடியோவில், " வெயிட் பெண் மீது விழுந்ததும், அதற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த பயிற்சாளராக கருதப்படும் நபர் ஒருவர், உடனடியாக தூக்க முயற்சித்தார். ஆனால், அதீத் வெயிட் காரணமாக அவரால் முடியவில்லை. உடனடியாக, ஓடி வந்த பலரின் உதவியுடன், அதீத எடை கொண்ட பார்பேல்லை தூக்கி அப்பெண்ணை வெளியே இழுத்தனர். இருப்பினும்,அதற்குள் சம்பவ இடத்திலே கழுத்து நசுங்கி அவர் உயிரிழந்தார்.

35 முதல் 45 வயது மதிப்புத்தக்க அப்பெண், தனது மகளுடன் ஜிம் வந்ததாக சொல்லப்படுகிறது. விபத்தை நேரில் பார்த்த சிறுமிக்கு உளவியல் ரீதியான கவுனிசிலிங் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், பெயரிடப்படாத ஜிம் உரிமையாளர், பெண்ணின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அதிக வெயிட் கொண்ட பார்பேல்லை ஏன் அப்பெண் தூக்க முயன்றார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment