மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் 42 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது எடுக்கப்பட்ட கல்லூரி வகுப்பு மாணவர்களின் குழு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு யாராவது தன்னை கண்டுபிடியுங்கள் என்று கூறினார். அந்த புகைப்படத்தில் ஜிதேந்திர சிங்கை பாஜக தொண்டர் ஒருவர் சரியாக அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் வடகிழக்கு மாநிலங்களுக்கான மத்திய அமைச்சராக உள்ளார் டாக்டர் ஜிதேந்திர சிங். இவர் ஒரு மத்திய அமைச்சராக உள்ள அரசியல்வாதி மட்டுமல்ல. எம்.பி.பி.எஸ் படித்த ஒரு மருத்துவர். நீரிழிவு நோய் சிகிச்சை நிபுணர். இதைவிட ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், டாக்டர் ஜிதேந்திர சிங் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்தவர்.


இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், 1978-ம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்தபோது எடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களின் குரூப் புகைப்படத்தை வெளியிட்டு யாராவது இதில் தன்னை கண்டுபிடியுங்கள் என்று கேட்டிருந்தார். மேலும், இந்த புகைப்படம் தன்னுடன் படித்தவர் அனுப்பியிருந்ததாக தெரிவித்துள்ளார்.


42 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதால், சுமார் 100 பேர்கள் உள்ள அந்த புகைப்படத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான செயல்தான். பலரும் இந்த புகைப்படத்தில் ஜிதேந்திர சிங் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் சோர்ந்துபோய் இருந்த நிலையில், பாஜக தொண்டர் ஒருவர், அந்த புகைப்படத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சரியாக அடையாளம் கண்டுபிடித்து சுட்டிக்காட்டி சரியா என்று கேட்டு டுவிட் செய்து அமைச்சரை டேக் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close