ஒரே ஒரு வீடியோவிற்காக 35 லட்சமா? மோடியை விமர்சிக்கும் தலைவர்கள்

பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட ஃபிட்னஸ் வீடியோவிற்கு செலவாகியிருக்கும் பணத்தின் மதிப்பீடு குறித்த தகவல் வெளியாகத் தொடங்கியுள்ளது. ஒரு நிமிட வீடியோவிற்காக பல லட்சங்களை மோடி செலவு செய்திருப்பதை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வந்தது ஃபிட்னஸ் சேலஞ்ச். சமூக வலைத்தளங்களில் இருக்கும் அனைத்துப் பிரபலங்களும் உடற்பயிற்சி வீடியோ மூலம் ஒருவருக்கு ஒருவர் சேலஞ்ச் செய்து வந்தனர். தொடர்ச்சியாக இந்தச் சவால்கள் பிரபலமடைந்து வந்த நேரத்தில் இந்தியன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வீடியோ மூலம் பிரதமர் மோடிக்குச் சவால் விடுத்தார்.

மோடியின் ஃபிட்னஸ் வீடியோ குறித்த செய்தி

விராட் கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட மோடி, சிறிது காலம் தாமதம் ஆனாலும் ஃபுல் குவாலிட்டியுடன் ஆன ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவை நாம் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் இதற்குப் பின்னால் மறைந்திருக்கும் பணச் செலவின் ரகசியம் என்ன என்று தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட ஒரு நிமிட ஃபிட்னஸ் வீடியோவிற்காக சுமார் 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒரே நாளில் எடுக்கப்பட்டது கிடையாது. இதற்காக மூன்று நாள் செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இரண்டு நாட்கள் எடிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பாலிவுட்டில் புகைப்பட கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார். எனவே ஒரு நாள் மட்டுமே 12 லட்சம் செலவு செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே ஒரு வீடியோ அதுவும் பொழுதுபோக்கு வீடியோவிற்காக 35 லட்சம் செலவு செய்த மோடியை அரசியல் தலைவர்கள் உட்படப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close