நெட்டிசன்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் மோமோ தான்!

கொடூரமான மோமோவை நம்ம ஊர் நெட்டிசன்கள் காமெடி பீஸியாக மாற்றி விட்டனர்.

momo memes :

கடந்த சில நாட்களாக   ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று எந்த பக்கம் திரும்பினாலும், மோமோ குறித்த பேச்சு,  வீடியோ, மீம்ஸ் தான். அப்படி யாப்பா அந்த மோமோ  ன்னு விசாரித்தால் அவரின் பேக் ரவுண்ட் படு பயங்கரமாக இருந்தது.

புளூவேல் சேலஞ்ச் போன்று  தற்கொலை விளையாட்டான இந்த மோமோ சேலஞ்ச்  ரஷ்யா போன்ற வெளிநாடுகளில்  தடை செய்யப்பட்ட விளையாட்டு ஆகும்.  தற்போது இந்த மோமோ சேலஞ்ச்  வாட்ஸ் அப்பில் லிங்க் வழியாக பரவி வருகிறது.

பிதுங்கிய உருண்டை கண்கள், விரிந்த முடிகள், வெளிர் நிற தோலுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் முகம் தான் மோமோ. இந்த பெண் தான்  மோமோ சேலஞ்ச் விளையாட்டின் இறுதியின் நம்மை தற்கொலைக்கு தூண்டுவாள்.அத்துடன் ஃபேனையும் ஹாக் செய்து மிரட்டுவாள்.

இப்படி கொடூரமான மோமோவை நம்ம ஊர் நெட்டிசன்கள் காமெடி பீஸியாக மாற்றி விட்டனர். எவ்வளவு பெரிய தாதாவாக இருந்தாலும் நெட்டிசன்கள் கையில் சிக்கினால் சின்னாப்பின்னம் தான் என்பதை இந்த மோமோ மீம்ஸ்கள் புரிய வைக்கின்றன.

குறிப்பாக சிங்கில்ஸை மையம் வைத்து நெட்டிசன்கள் வெளியிடும் மோமோ மீம்ஸ்கள் வேற லெவல் கலாய்.    இந்த மோமோ மீம்ஸில் பிக் பாஸ் ஜனனி,  பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனும்   தப்பிக்க வில்லை.  இணையத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் மோமோ மீஸ்கள் இதோ உங்கள் பார்வைக்கு…

 

மோமோவின் வரலாறு

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close