New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/05/sachin-27.jpg)
viral news today
ஏதாவது ஒரு அர்த்தத்தை வைத்தே வரையபட்டிருக்கும்.
viral news today
viral news today : பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற ஒவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடிக்கு ஏலம் போனது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பொதுவாகவே சில ஓவியங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பார்த்தவுடனே எளிதாக எல்லோரையும் கவர்ந்து விடும். வேறு சில ஓவியங்கள் ரொம்பவும் சிம்பிளாக இருந்தாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்திருக்கும். அவை பார்ப்பதற்கே ஒன்றுமே புரியாத மாறி இருந்தாலும் அவை ஏதாவது ஒரு அர்த்தத்தை வைத்தே வரையபட்டிருக்கும்.
இப்படி இருக்கையில், இணையவாசிகள் இன்று காலை முதல் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் குறித்து அதிகம் பேசி வருகின்றனர். காரணம் அந்த ஓவியம் ரூ. 778 கோடிக்கு ஏலம் போனது தான்.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் ஓவியங்கள் எப்போதுமே தனித்துவம் வாய்ந்தவை. இவர் வரைந்த ஒரு சில ஓவியங்கள் மட்டுமே இப்போது வரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மொனெட் 1890 ஆம் ஆண்டு கிராமப்புற வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் வைக்கோல் ஓவியம் ஒன்றை வரைந்தார். அப்போதைய காலக்கட்டத்தில் அந்த வைக்கோல் ஓவியம் அனைவராலும் அதிகம் பேசப்பட்டது.
இந்த ஓவியத்திற்கு இப்போது ’மீலெஸ்’ என பெயர் வைத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சோத்பி ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் மொனெட் வரைந்த ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஓவியம் ஏலம் போனது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.778 கோடி.
ஏலம் தொடங்கிய முதல் 8 நிமிடங்களில் இந்த வைக்கோல் ஓவியம் விலைக்கு போனது மற்றொரு ஆச்சரியம். இந்த தகவல் வெளியானது முதல் இணைய வாசிகள் பலரும் வைக்கோல் ஓவியத்தை அதிகளவில் விமர்சித்து வருகின்றனர்.
#AuctionUpdate: 7 bidders battled for Claude Monet's 'Meules’ for 8 minutes before achieving its final price of $110.7 million
— Sotheby's (@Sothebys) 14 May 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.