சிறந்த டான்ஸ்-க்கு 5000 யூ.எஸ் டாலர் பரிசு... சேலன்ஞ் விடுத்துள்ள கிறிஸ் கெயில்!

பாலிவுட் மற்றும் இந்திய சினிமா குறித்து ரொம்ப தெரியாதபோதிலும், "Laila-o-laila" பாட்டுக்கு டான்ஸ் ஆடி பட்டையைக் கிளப்புகிறார் கிறிஸ் கெயில்.

வெஸ்ட் இன்டீஸின் கிறிஸ்கெயில் பேட்டிங் மட்டும் ஆடத்தெரிந்தவர் அல்ல என்பதற்கு அவரின் “ஆட்டம்” தான் சிறந்த எடுத்துக்காட்டு. ஆம், பேட்டிங்கில் அதிரடியால் மிரட்டும் அவர், டான்ஸிலும் மிரட்டுபபவர் தான். அந்த வகையில் தான் அவரின் கங்னம் டான்ஸ்.

பாலிவுட் மற்றும் இந்திய சினிமா குறித்து ரொம்ப தெரியாதபோதிலும், “Laila-o-laila” பாட்டுக்கு டான்ஸ் ஆடி பட்டையைக் கிளப்புகிறார் கிறிஸ் கெயில்.

கிறிஸ் கெயில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அப்லோடு செய்திருக்கிறார். அதில் அவரது டான்ஸ் ஆடும் திறன் உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

அதோடு, அந்த பதிவில் #ChrisGayleDanceChallenge என்ற ஹேஸ்டேக்கை பதிவு செய்து, அதேபோன்ற சிறந்த டான்ஸ்-க்கு 5000 யூ.எஸ் டாலர் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். சிறந்த 5-டான்ஸை நான் சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்யப்போவதாகவும், அதை பார்க்கும் மக்கள் யார் வெற்றியாளர்கள் என்பதை தீர்மானிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மறக்காமல் #ChrisGayleDanceChallenge பயன்படுத்தவும். வரும் 24-ம் தேதி வெற்றியாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close