இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரின் முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. நீண்ட காலத்துக்கு பிறகு இந்திய அணி சென்னையில் விளையாடும் சர்வதேச போட்டி என்பதால், ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே இதே மைதானத்தில் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி சற்று சுணக்கத்துடன் விளையாடினாலும், தோனி, ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வென்றது.
போட்டியில் வெற்றி பெற்றதைவிட சென்னை ரசிகர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான விஷயமே அவர்களின் ’தல’ தோனியின் ஆட்டத்தை நேரில் பார்த்தது தான். தோனி மைதானத்துக்குள் நுழைந்ததுமே சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாகமாக வரவேற்றனர். மேலும், இந்த போட்டியில், தோனி தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 100-வது அரை சதத்தை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் அபார விளையாட்டால் உற்சாக குரலெழுப்பும் சென்னை ரசிகர்கள்.