நாசா காலண்டரை அலங்கரிக்கப்போகும் தமிழக மாணவர்களின் ஓவியங்கள்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் காலண்டரில் தமிழகத்தை சேர்ந்த இரு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் கூடிய விரைவில் இடம்பெற உள்ளன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் காலண்டரில் தமிழகத்தை சேர்ந்த இரு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள் கூடிய விரைவில் இடம்பெற உள்ளன.

நாசா காலண்டரில் இடம்பெறும் ஓவியங்களுக்காக அந்த ஆராய்ச்சி நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள 4 முதல் 12 வயது குழந்தைகளிடையே பல்வேறு தலைப்புகளின் கீழ் போட்டி நடத்தியது. இதற்காக, 193 நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 குழந்தைகள் தங்களது கைவண்ணத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தனர். அதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காவியா மற்றும் செல்வா ஸ்ரீஜித் ஆகியோரும் வெற்றிபெற்றனர். இவர்களின் ஓவியங்கள் விரைவிலேயே நாசாவின் காலண்டரில் இடம்பெற உள்ளன.

காவியா மற்றும் ஸ்ரீஜித் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 குழந்தைகளின் ஓவியங்கள் தேர்வாகியுள்ளன.

இந்த போட்டியில் மாணவர் ஸ்ரீஜித் “வீட்டிலிருந்து விண்வெளிக்கு எவற்றையெல்லாம் எடுத்து செல்வீர்கள்?”, என்ற தலைப்பின் கீழ் ஓவியத்தை வரைந்தார். அதில், விண்வெளி வீரர் ஒருவர் தன் மகள், நாய்க்குட்டி உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்வதுபோன்று ஸ்ரீஜித் ஓவியம் வரைந்துள்ளார்.

அதேபோல், ’விண்வெளி உணவு’ என்ற தலைப்பின்கீழ் மாணவி காவியா தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதில், விண்வெளியில் தோட்டம் அமைப்பதுபோன்று காவியா வரைந்திருந்தார்.

×Close
×Close