Advertisment

அதனால் தான் அவர் தல.."ஹேட்ஸ் ஆஃப் தோனி" நெகிழும் நெட்டிசன்கள்!

ஹேட்டர்ஸ்க்கு இதோ வந்துட்டேன் பாருனு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹேட்ஸ் ஆஃப் தோனி

ஹேட்ஸ் ஆஃப் தோனி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில்

Advertisment

கடைசி நேர ஆட்டத்தில் தோனி அடித்த கிளாசிக் "ஃபினிஷிங்" தான் இணையதளத்தில் டாப் வைரல்.

ஹேட்ஸ் ஆஃப் தோனி :

"தோனி ஃபார்ம் காலி..பழைய தோனிய இனிமேல் பார்க்க முடியாது” இப்படியெல்லாம் பேசி வந்த தன்னுடைய ஹேட்டர்ஸ்க்கு இதோ வந்துட்டேன் பாருனு அடித்து மீண்டும் புரிய வைத்திருக்கிறார் தல தோனி.

நேற்று அடிலெய்டில் நடைப்பெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்கமால் நின்று, அரைசதம் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்து மீண்டும் தன் ஃபினிஷிங் திறனை வெளிப்படுத்தியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.

தோனி அடிலெய்டு ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததோடு. கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி அந்த ஓவரை சந்தித்தார். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தவர், அடுத்த பந்தில் மின்னல் வேகத்தில் ஒரு ரன் ஓடி அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த த்ரில் ஆட்டத்தை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், இணையத்தில் தோனியை கொண்டாடி வருகின்றனர்.

Social Media Viral Mahendra Singh Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment